1. விவசாய தகவல்கள்

320 பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி: விவசாயி அசத்தல்!

R. Balakrishnan
R. Balakrishnan
Cultivation of 320 Traditional Paddy Varieties

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வரிச்சிக்குடியில், 320 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து விவசாயி அசத்தி வருகிறார். அதனை அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

320 பாரம்பரிய நெல் ரகம் (320 Traditional Paddy Varieties)

காரைக்கால் வரிச்சிக்குடி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். விவசாயியான இவர், 320 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து அசத்தி வருகிறார். மேலும் அதனை முறைப்படி பாதுகாத்து வருகிறார்.

குறிப்பாக குழந்தைகளுக்கு சத்து ஊட்டக்கூடிய பால் குடை வாழை, நவரா, பாலூட்டும் பெண்களுக்கு சிறந்த சக்தியாக விளங்கும் பூங்கார், அறுபதாம் குருவை, சூலக்குருவை, ஆண்களுக்கு ஊட்டம் தரும் மாப்பிள்ளை சம்பா, உடல் வலிமை பெருக்க மன்னர்கள் மட்டுமே உட்கொள்ளப்பட்டு வந்த கருப்பு கவுனி, மூட்டு வலி குணமடைய இலுப்பைப்பூ சம்பா, தங்க சம்பா, ஆரோக்கியம் பெறுக ஒட்டடையான், காட்டு யானம், கடவுளுக்கு உணவு படைக்க கோவிந்தா போக் போன்ற பல வகையான பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.

வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆய்வு (Inspection for Agriculture Students)

இதனை அறிந்த காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில் 4-ம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 45 பேர் கல்லூரி இணை பேராசிரியர் ஆனந்த குமார் தலைமையில் நேற்று நெல் சாகுபடி செய்த வயலில் நேரடியாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் முயற்சியில் களம் இறங்கி உள்ளனர்.

இதுகுறித்து விவசாயி பாஸ்கர் கூறுகையில், அண்மையில் பெய்த தொடர் அடை மழை காரணமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் சேதம் அடைந்து விட்டது. வெறும் 3 நெல் ரகங்களை கொண்டு முதலில் தொடங்கிய நெல் மரபணு மீட்டெடுப்பு பணி, கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சேகரித்து இன்று 320-ஐ எட்டியுள்ளேன்.

மேலும் எனது சொந்த முயற்சியில் நெல்லப்பர் 1, 2, 3 என்று 75 வரை பெயரிட்டு நெற்பயிருக்கு உள்ள பல்லுயிர் வேறுபாட்டினை பெருக்கம் செய்து வருகிறேன் என்றார்.

மேலும் படிக்க

சம்பா நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இயற்கை விவசாயி!

கொரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் பாதிப்பு: பெருங் கவலையில் விவசாயிகள்!

English Summary: Cultivation of 320 Traditional Paddy Varieties: Farmer Stunning! Published on: 12 January 2022, 07:49 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.