1. விவசாய தகவல்கள்

தொழில் முனைவோராக உதவும் PMEGP திட்டம் - 35% மானியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Entrepreneurial Transformation PMEGP Program - 35% Subsidy!

மத்திய அரசின் PMEGP திட்டத்தின் இணைந்தால், உங்களுக்கு 35 சதவீத மானியத்துடன் கடனும் கிடைக்கும். உங்கள் கனவான தொழில் அதிகபராக மாறுவீர்கள்.

பிரதமரியின் ரோஸ்கார் வேலைவாய்ப்பு யோஜனா (PMRY) திட்டம் மற்றும் கிராம புறவேலை வாய்ப்பு திட்டம் (REGP)யும் ஆகிய இரண்டு திட்டங்களும் இணந்து, ஆகஸ்டு 15, 2008யில் உருவானது தான், இந்த பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு பெருக்கு திட்டம்(PRIME MINISTERS EMPLOYMENT GENERATION PROGRAM). 

தற்போது கிராமம், நகர்ப்புற பேதமின்றி அனைத்து இடங்களிலும் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.புதிய அறிவிப்பின் படி அமைப்பு மற்றும் குழுவாக தொழில் தொடங்க முடியாது. தனிப்பட்ட நபர் மட்டும் மானியம் பெற முடியும்.

தொழில் கடன்

தற்போது வேளாண் சார்ந்த தொழில்களான, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களைத் தொடங்கக் கடன் வழங்கப்படும். தொழிலை கிராமமோ அல்லது நகரமோ எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம்.

சலுகைகள்

பெண்களுக்கு 30 சதவிகிதமும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15%ம், பழங்குடியின இனத்தவர்களுக்கு 7.5 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கதர் கிராமத் தொழில் ஆணையம் (KVIC) உட்பட்ட 11 மாவட்டங்களில் 276 புதிய தொழில் தொடங்குவதற்கு மானியம் மட்டும் ரூ.8.68 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

விவசாயம் சார்ந்த தொழில் செய்ய விரும்பும் படித்த, வேலை வாய்ப்பற்ற வேளாண் தொழில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அந்த அந்த மாவட்டத்திலுள்ள தொழில் மையம்/கதர் கிராமத்தொழில் வாரியத்தை தொடர்பு கொண்டு புதிய தொழில் தொடங்கி தொழில் முனைவோராக மாறலாம்.4 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கலாம். நாமும் நாடும் முன்னேற வழிகாட்டிகளாக மாறலாம்.

35 % மானியம்

தொழிலை நகரத்தில் தொடங்கினால் 15 முதல் 25 சதவீகிதமும், கிராமத்தில் தொடங்கினால் 25 முதல் 35 சதவீகிதமும் மானியம் உண்டு. தற்போது முதலீட்டு கடனும் மானியமும் புதிய பார்முலாபடி இரண்டு மடங்கு உயர்ந்துள்ளன.


தகவல்
அக்ரி கூ.சந்திரசேகரன்,
வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை 94435 70289

மேலும் படிக்க...

சரிவில் தங்கம் விலை- 2 நாட்களில் ரூ.1,064 குறைந்தது!

காணாமல் போன 1.50லட்சம் ரூபாய் பேனா- வலைவீசும் போலீஸ்!

English Summary: Entrepreneurial Transformation PMEGP Program - 35% Subsidy! Published on: 09 July 2022, 07:40 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.