1. விவசாய தகவல்கள்

கரும்பு விவசாயிகளுக்கு வரவிருக்கும் ஆண்டில் கிடைக்கப்போகும் நல்ல வாய்ப்பு!

KJ Staff
KJ Staff
Good opportunity for sugarcane farmers in the coming year!

கரும்பு விவசாயிகளுக்கு 2016-17, 2017-18, 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் அகில இந்திய அளவில் விலை ரூ. 55,340 கோடி, ரூ. 83,629 கோடி, ரூ. 86,617 கோடி, ரூ. 907,75 கோடி மற்றும் ரூ. 92,881 கோடியாக இருந்தது நாம் அறிந்ததே.

சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ. 88,436 கோடி செலுத்தியுள்ளன என்றும், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2020-21 சந்தைப்படுத்தல் ஆண்டில் வழங்கப்பட்ட கரும்புக்கு ரூ. 4,445 கோடி இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்புவிடுத்திருக்கிறது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, 2020-21 (அக்டோபர்-செப்டம்பர்) சந்தைப்படுத்தல் ஆண்டிற்கு, டிசம்பர் 6 ஆம் தேதி வரை விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகை ரூ. 4,445 கோடி ஆக இருக்கிறது என்று தெரிவித்து இருந்தது. மேலும் 2020-21 சந்தைப்படுத்தல் ஆண்டிற்கான மொத்தத் தொகை ரூ. 92,881 கோடி, இதில் ரூ. 88,436 கோடி ஏற்கனவே செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பேசுகையில், ''கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு கரும்பு விலையை சர்க்கரை ஆலைகள் வழங்குவது தொடர்பான பிரச்சனை நடவடிக்கை உள்ளது.  கரும்பு விவசாயிகளுக்கு 2016-17, 2017-18, 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் அகில இந்திய அளவில் கரும்பு விலை ரூ. 55,340 கோடி, ரூ. 83,629 கோடி, ரூ. 86,617 கோடி, ரூ. 907,75. கோடி மற்றும் ரூ. 92,881 கோடியாக இருந்தது.

அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளால், கரும்பு பருவம் 2016-17, 2017-18, 2018-19, 2019-20, 2020-21 ஆகிய ஆண்டுகளுக்கான விவசாயிகளின் கரும்பு நிலுவை, 65 கோடி, 135 கோடி, 365 கோடி, 130 கோடி மற்றும் 4,445 கோடியாக உயர்ந்துள்ளது.

 ஜோதி கூறுகையில், "கரும்பு விவசாயிகளுக்கு, வழங்குவதில் பெரிய காலதாமதம் இல்லை, கரும்பு நிலுவைத் தொகை பெயரளவில் உள்ளது".

இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது

இந்தியாவில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிடுவதைப் பார்க்க முடிகிறது. எனவே, நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக சர்க்கரை ஏற்றுமதியும் அதிகரித்திருக்கிறது. இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கமான(ISMA) கூற்றுப்படி, அக்டோபர் 1, 2021 நிலவரப்படி 81.75 லட்சம் டன் சர்க்கரையின் தொடக்க இருப்பு இருந்தது மற்றும் 305 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி என மதிப்பிடப்பட்டதால், இந்தியா மற்றொரு உபரி சர்க்கரை உற்பத்தியாளராக இருக்கும். 2021-22 பருவத்தில் நாட்டிலிருந்து சுமார் 60 லட்சம் டன் உபரி சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

பிரேசிலில் உற்பத்தி குறைய தொடங்கியதால் அடுத்த அமர்வில் உலகச் சந்தையில் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பைக் கருத்தில் கொண்டு, உலகளாவிய சர்க்கரை விலை நான்கு ஆண்டுகளில் அதிகபட்சமாக ஒரு பவுண்டுக்கு 20 சென்ட் என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படும் என ISMA சில காலத்திற்கு முன்பே கூறியிருந்தது.  இதன் பொருள், இந்திய சர்க்கரை ஆலைகள் அடுத்த சில மாதங்களில் ஜனவரி 2022 ல் அல்லது ஏப்ரல் 2022 வரை உள்ள வரவிருக்கும் காலத்தில், பிரேசில் தன் சர்க்கரையை சந்தைக்கு கொண்டு வருவதற்கு முன்பு, இந்திய தனது உபரி சர்க்கரையை ஏற்றுமதி செய்யும் நல்ல வாய்ப்பைப் பெறும்.

மேலும் படிக்க:

விவசாயம்: ஒரு ஏக்கரில் 4 லட்சம் வருமானம் தரும் சர்பகந்தா

பெயரின் இனிஷியலையும் தமிழில் எழுத வேண்டும்: அரசு உத்தரவு!

English Summary: Good opportunity for sugarcane farmers in the coming year! Published on: 11 December 2021, 02:02 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.