1. விவசாய தகவல்கள்

சம்பங்கி சாகுபடி குறித்த தகவல்கள் இதோ!!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Tuberrose

நிலம் தயாரித்தல்(Land preparation)

சம்பங்கி செடியைப் பொறுத்தவரை உவர நிலம் மற்றும் களர் நிலங்கள் என்று எல்லாவகையான நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். 5 முறை உளவு செய்ய வேண்டும். களைகள் முளைக்காத வண்ணம் உழுவ வேண்டும். கடைசி உழவில் அடியுரமாக டி.ஏ.பி. 50 கிலோவும், பொட்டாஷ் 20 கிலோவும், சூப்பர் பாஸ்பேட் 50 கிலோவும் போட வேண்டும். ஆட்டு கிடை பயன்படுத்தவில்லை என்றால் 8 - 10 டன் தொழு  உரம் போட வேண்டும்

சம்பங்கி கிழங்கு விதைநேர்த்தி(kraft Seed Treatment)

சம்பங்கி கிழங்குகளை நடுவு செய்வதற்கு தேர்வு செய்யும்போது செடி நடவு செய்த 4 வருடம் ஆன தாய் செடியில் இருந்துதான் கிழங்குகளை தேர்வு செய்யலாம். சம்மங்கி கிழங்கை விதைநேர்த்தி செய்யாமல் நடவு செய்தால் அதிகம் பூஞ்சைக்கால் புடித்து கிழங்குகள் அழுகிவிடும். இதனால் முளைப்பதற்கான திறனும் குறைந்தே காணப்படும்.  அதனால் பூஞ்சைக்கால் பாதிப்பு வராமல் இருக்க விதைநேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.

ஓரு ஏக்கருக்கு சம்பங்கி நடவு செய்ய 500 முதல் 600 கிலோ விதைக் கிழங்கு தேவை இருக்கும். இந்த 500 கிலோ விதைக் கிழங்கை விதைநேர்த்தி செய்ய 3 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி,  3 கிலோ வேம்பு,  3 கிலோ மக்கிய மாட்டுச்சாணம், 3 கிலோ சூடோமோனஸ் ஆகியவை அனைத்தையும் 30 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பிறகு அந்த கரைசலை சம்மங்கி கிழங்குகளில் ஊற்றி நன்றாக பிறட்டி நிழலில் ஒரு மணிநேரம் உழரவிட்டு நடவு செய்ய வேண்டும். 

நடவு செய்தல்(Planting)

 ஒரு குத்திற்கு 6 கிழங்குகள் இருக்கும் அளவிற்கு நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு வரிசைக்கும் 45 சென்டி மீட்டர் இடைவெளியும், செடிக்கு செடி 40 சென்டி மீட்டர் இடைவெளிய இருக்குமாறும் நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரநிர்வாகம்(Fertilizer management)

சம்பங்கி நடவு செய்த பின் ஒரு மாததிற்கு ஒரு முறை 500 கிலோ ஆட்டு எரு மற்றும் 50 கிலோ கடலை புண்ணாக்கு அதாவது தண்ணீரில் ஊற வைத்து ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தொடர்ந்து பூ பூத்துக் கொண்டே இருக்கும்.

நுண்ணுட்ட உர நிர்வாகம்(Micronutrient Fertilizer Management)

சம்பங்கிக்கு போரான் நுண்ணூட்ட சத்து மிகவும் முக்கியமானதாகும். அதனால் தண்ணீர் வடிவில் கிடைக்கும். அந்த போரான் நுண்ணூட்ட உரத்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற கணக்கில் கலந்து அதனுடன் ஒட்டு பசை சேர்த்து சம்பங்கி வயலில் மாதம் ஒரு முறை தெளிக்கலாம். மேலும் இலைவழியாக போரான் நுண்ணூட்டம் உரம் கொடுப்பதால் பூ மலர்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் பூ சந்தையில் நல்ல விலைக்கு போகும்.

மெக்னிசியம் சத்து(Magnesium nutrient)

சம்பங்கி பூ சிறியதாக இருப்பது, பூ உதிர்வது போன்ற குறைபாடுகள் இருந்தால் மெக்னிசியம் சத்து பற்றாகுறையால் ஏற்படும். இந்த மெக்னிசியம் சத்து குறைப்பாட்டால் பூக்களின் காம்பில்  கருப்பாகவும், பூக்கள் சிரியதாகவும் பூக்கும். சில சமயம் பூக்கள் உதிரவும் tாய்ப்பு உள்ளது. இதனால் சம்பங்கி வயலில் இவ்வகை ஆறிகுறிகள் தென்பட்டால் மெக்னிசியம் - இடிடிஏ (EDDT) வை வாங்கி 10 லிட்டர் தண்ணீர்க்கு 15 கிராம் வீகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.


மேலும் படிக்க:

பயறு வகை விதைப்பண்ணைகள் நிறைந்த லாபம் தரும் தொழில்!

கொய்யாப்பழத்தில் விதைகளை குறைத்து தரத்தை உயர்த்தும் வழி!

English Summary: Here is information about Sampangi Kraft in cultivation !! Published on: 19 July 2021, 01:02 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.