1. விவசாய தகவல்கள்

SBI வங்கியில் கிசான் கிரெடிட் கார்டு வாங்குவது எப்படி?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Kisan Credit Card at SBI Bank

மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதில் குறிப்பாக விவசாயிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறும் வகையில் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கிசான் கிரெடிட் கார்டு

மத்திய அரசு கடந்த 1998ம் ஆண்டு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சியால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டத்தை செயல்படுத்த பாரத ஸ்டேட் வங்கி உறுதுணையாக.உள்ளது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடனானது கிசான் கிரெடிட் கார்டு மூலமாக மட்டுமே வழங்கப்படுகிறது.

அத்துடன் இதில் எந்தவொரு உத்தரவாதமின்றி ரூ.3 லட்சம் வரை பெற முடிகிறது. இதில் ரூ.3 முதல் 5 லட்சம் வரை கடன் பெற்றால் 4% வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு 2% மானியமும் வழங்குகிறது. மேலும் கடனை குறிப்பிட்ட தேதியின் படி திருப்பி செலுத்தினால் 3% தள்ளுபடியும் கிடைக்கிறது. அதனால் விவசாயிகள் மத்தியில் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் கடனை கால அவகாசத்திற்குள் செலுத்தவில்லையெனில் 7% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த கிசான் கிரெடிட் கார்டு பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். இதற்கு முதலாவதாக https://sbi.co.in/web/agri-rural/agriculture-banking/crop-loan/kisan-credit-card  என்ற  இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். அடுத்ததாக லாகின் தகவல்களை உள்ளிட வேண்டும். இதையடுத்து YONO விவசாயம் என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். பின்பு Khata என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து கிசான் கடன் அட்டை மதிப்பாய்வு பகுதிக்கு செல்ல வேண்டும். இறுதியாக Apply என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் தங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அலுலர்கள் தங்களை தொடர்பு கொள்வார்கள். அதன்படி தங்கள் கிசான் கடன் அட்டை 15 நாட்களுக்குள் கிடைக்கும்.

மேலும் படிக்க

2-வது பெண் குழந்தைக்கு மத்திய அரசின் சிறப்பு சலுகை திட்டம்

English Summary: How to buy Kisan Credit Card at SBI Bank? Published on: 03 March 2022, 10:19 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.