
Credit : haztesostenible.com
விவசாயம் இன்றைய அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இன்றும் விவசாயம் தான் இருந்து வருகிறது. ஆனால் வேளாண்துறையில் லாபம் என்பது கேள்விக்குறியாக இருப்பதாக பலரும் நினைத்து வருகின்றனர்.
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை நீங்கள் சரியாகச் செய்தால் விவசாயம் ஒரு இலாபகரமான வணிகமாக மாறும். உங்களிடம் சிறு பகுதி நிலவசதி இருந்தால் போதும் மிகக் குறைந்த முதலீட்டில், நீங்கள் நல்ல வருமானத்தைப் பெற முடியும். அத்தகைய சிறு முதலீடுகள் மூலம் அதிக லாபம் தரும் சிறு வேளாண் தொழில்கள் (High-profitable agricultural business ideas) குறித்து நாம் பார்போம்...
உர விநியோகம் - Fertilizer distribution
சிறிய நகரங்கள் அல்லது கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இந்த வணிகம் மிகவும் நல்லது. இந்த வியாபாரத்தில், நீங்கள் பெரிய நகரங்களிலிருந்து உரங்களை வாங்கி கிராமப்புறங்களில் விற்க வேண்டும். கிராமப்புறங்களில் தொடங்குவதற்கான சிறந்த விவசாய வணிகத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
காட்டாமணக்கு விவசாயம் - Jatropha farming
பயோடீசலை உற்பத்தி செய்வதற்காக, காட்டாமணக்கு ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது, காட்டாமணக்கு விவசாயம் மிகவும் பிரபலமான சிறு விவசாய வணிகத் திட்டங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது பற்றி மிகச் சிலரே அறிவார்கள். காட்டாமணக்கு பயிரின் சிறந்த விஷயம் என்னவென்றால், ஏழை மண், தரிசு நிலங்கள், குறைந்த மழைப்பொழிவு மற்றும் வறட்சி பகுதிகள் உட்பட பரந்த அளவிலான மண்ணில் இதை வளர்க்க முடியும். இது குறித்து சிறிய ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த விவசாயத் தொழிலை நீங்கள் எளிதாகத் தொடங்கலாம்.

Credit : ponicgreens.com
ஹைட்ரோபோனிக் சில்லறை கடை - Hydroponic retail store
இது ஒரு புதிய பெருந்தோட்ட தொழில்நுட்பமாகும், இது வணிக மற்றும் வீட்டு உபயோகத்திற்காக மண் இல்லாத தோட்டக்கலை சம்பந்தப்பட்டது. ஹைட்ரோபோனிக்ஸ் கடைகள் ஹைட்ரோபோனிக் தோட்டக்காரருக்குத் தேவையான சிறப்பு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் விற்கின்றன. ஹைட்ரோபோனிக் சில்லறை விற்பனையகத்தைத் தொடங்க திட்டமிடல் ஒரு முக்கிய யோசனையாகும்.
முயல் வளர்ப்பு - Rabbit farming
தற்போது, முயல்களை வளர்ப்பது வணிக மட்டத்தில் தொடங்கியுள்ளது. மிக விரைவில் லாபம் கிடைக்கப்பெறும் வேளாண் தொழில்களில் இதுவும் ஒன்று, அதாவது முயல் வளர்ப்பு ஆரம்பித்த 6 மாத காலத்திலிருந்தே பலன் பெறலாம். அங்கோரா முயல்கள், உரோமத்தின் தரத்திற்காக வளர்க்கப்படுகிறது. 1000 – 1200 கிராம் அளவு உரோமத்தை நல்ல மேலாண்மை முறையைப் பின்பற்றினால் அதிக லாபம் பெறலாம். முயல்களை எந்த விதமான சூழ்நிலைகளிலும், அதாவது புறக்கடைத் தோட்டம் முதல் பெரிய அளவில் ஒரு தொழிலாகவும் செய்யலாம்.
மசாலா பொருட்கள் தயாரிப்பு - Spice processing
இயற்கையாக விளைவிக்கப்படும் மசாலாப் பொருட்களுக்கு உலகளாவிய மற்றும் உள்ளூர் சந்தைகளில் அதிக தேவை உள்ளது. இதற்கு கூடுதல் முதலீடும் தேவை இல்லை. தரமான பேக்கிங் மற்றும் தயாரிப்பு முறைகளால் நல்ல லாபம் பெற முடியும். சீரகம், மிளகு போன்ற சந்தையில் அதிகம் தேவைப்படும் மசாலாப் பொருள்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.
மேலும் படிக்க....
வேளாண் துறையில் நல்ல லாபம் ஈட்ட வேண்டுமா? இதோ உங்களுக்கான சுய தொழில் வாய்ப்புகள்!