Krishi Jagran Tamil
Menu Close Menu

மழைக்காலங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிக்கும் -விவசாயிகள் கவனத்திற்கு

Wednesday, 15 July 2020 08:52 AM , by: Elavarse Sivakumar

credit: Venom

கடந்த 20 ஆண்டுகளில், தென்மேற்கு பருவமழைக் காலத்தில், பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருந்திருப்பதும், பாம்புக்கடிக்கு 12 லட்சம் இந்தியர்கள் பரிதாபமாக பலியாகியிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகளாவிய சுற்றுச்சூழலியல் தொடர்பாக இ-லைஃப் பத்திரிகை சார்பில் (e-Life Journal) அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கடந்த 2000-வது ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 12 லட்சம் இந்தியர்கள் பாம்புக்கடிக்கு தங்கள் இன்னுயிரை இழந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 முதல் 69-க்கு இடைப்பட்ட வயதுடையவர்கள். அதிலும் குறிப்பாக பாதிக்கும் மேற்பட்ட பாம்புக்கடி சம்பவங்கள், தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டர்மர் வரையிலான மாதங்களில் நிகழ்ந்துள்ளன.

பலிகொண்ட பாம்புகள் (Snake bites)

அவர்களில் பலருக்கு காலிலேயே, பாம்புக் கடித்துள்ளது. குறிப்பாக நாகப்பாம்பு, கட்டுவிரியன் போன்ற அதிக விஷம் கொண்ட பாம்புகளின் கடிக்கு ஆளாகியே இவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

சிகிச்சைக் கிடைக்கவில்லை

பலியானவர்களில் பெரும்பாலானோருக்கு, முறையான சிகிச்சைக் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில், ஆரம்ப சுகாதார மையங்கள் அருகில் இல்லாததும், மரணத்திற்கு மற்றுமொரு காரணமாக அமைந்திருக்கிறது.

 

credit: Researchgate

2001 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, உத்தரப்பிரதேசம், தெலங்கானாவை உள்ளடக்கிய ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 70 சதவீத உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இதையடுத்து ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன்-அமெரிக்காவைச் சேர்ந்த 44 நாடுகளில் 162 இடங்களில் யுனெஸ்கோவின் சர்வதேச உயிரியல் பூங்காக்களை (UNESCO Global Geopark)அமைக்க யுனெனஸ்கோ செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் அதிகரிப்பு (Movement Raising)

எனினும் இந்த ஆய்வில், தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிகபட்சமான பாம்புக்கடி மரணங்கள் நிகழ்ந்திருப்பது உறுதியாகியிருப்பதால், தற்போதைய அந்தப் பருவமழைக்காலத்தில், விவசாயிகள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

பாம்பின் இயல்பு (Snakes nature)

ஏனெனில் மழைக்காலங்களில் பாம்புகள் வசிக்கும் புற்றுகளுக்குள், தண்ணீர் செல்வதால், அவற்றின் வாழ்விடம் பாதிக்கப்படுகிறது.

தங்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படுவதால், தன் வசிப்பிடத்தை விட்டு வயல்வெளிக்கு பாம்புகள் வர நேர்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் விவசாயிகள் கூடுதல் கவனத்துடனும், விழிப்புடனும் இருக்குமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் படிக்க...

புலிகள் கணக்கெடுப்பில் நவீன யுக்தி - இந்தியா கின்னஸ் சாதனை!!

மனிதத் தோற்றத்தில் காட்சியளிக்கும் டிரிக்கர் மீன்கள்- வால்துடுப்பால் நீந்துவது அழகு!!

 

பாம்புகளின் நடமாட்டம் மழைக்காலங்களில் அதிகரிக்கும் 12 லட்சம் இந்தியர்கள் பலி பாம்புக்கடிக்கு பலி
English Summary: Increase the movement of snakes during the rainy season - Attention farmers

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பஞ்சகவ்யா விற்பனைக்கு! விவசாயிகள் கவனத்திற்கு!
  2. தரமான காய்கறி விதைகள் உற்பத்திக்கு மானியம் - தோட்டக்கலைத் துறை!!
  3. PMFBY: நெல்லுக்குப் பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசிநாள் - வேளாண்துறை அறிவுறுத்தல்!
  4. SSY:மாதம் 3000 முதலீட்டில் 17 லட்சம் ஈட்டும் மத்திய அரசின் திட்டம்! தெரியுமா உங்களுக்கு!
  5. ''வேளாண் வல்லுநர் அமைப்பு'' வழங்கும் - பயிர்களுக்கான ''ஆப்'' தொகுப்பு!!
  6. இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வோர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அழைப்பு!
  7. பசுந்தீவன விதைகளுக்கு முழு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கால்நடை துறை
  8. கொட்டித் தீர்க்கும் பருவமழையால், கிடுகிடுவென நிரம்பும் அணைகள்- கரையோர மக்களுக்கு காத்திருக்கிறது அபாயம்!
  9. UYEGP : 5% முதலீடு செய்தால் போதும்! அரசின் 25 % மானியத்துடன் நீங்களும் முதலாளி ஆகலாம்!
  10. விலங்குகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் எடுப்பதில் அரசு உறுதி - பிரகாஷ் ஜவடேகர்

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.