1. விவசாய தகவல்கள்

30 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் போக நெல் சாகுபடி-விவசாயிகள் மகிழ்ச்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Paddy cultivation-farmers happy to go second after 30 years!

இந்த ஆண்டுக் கோடை காலத்தில் பெய்த மழை காரணமாக இரண்டாம் கட்ட சாகுபடி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதால், நாகப்பட்டின விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

3 போக சாகுபடி (3 Boga cultivation)

முன்பு ஒரு காலத்தில் மும்மாறி மழை பெய்வது சாத்தியமாக இருந்தது. அதனால், விவசாயிகள் முப்போகமும் அறுவடை செய்து, தாங்கள் விளைவித்தப் பொருட்களை விற்பனை செய்து, பயிர்களைப்போல தங்கள் வாழ்க்கையையும், பசுமையாகவும், செழிப்பாகவும் வழி நடத்தி வந்தனர்.

மழையே சிக்கலாக மாறியது (The rain itself became a problem)

ஆனால், சீதோஷண மாற்றம், காலமாற்றம், தொழிற்சாலைகள் பெருக்கம் எனப் பல்வேறு காரணிகளால், மழைக்காலங்களில் மழை பெய்வதே சிக்கலானதாக தற்போது மாறிவிட்டது. இதனால், முப்போகம் என்பது ஒருபோகமாக சுறுங்கியது.

2-ம் போக நெல் சாகுபடி (Go to 2nd Paddy Cultivation)

இருப்பினும், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் 2-ம் போக நெல் சாகுபடி தற்போது சாத்தியமாகியிருக்கிறது.

நிரம்பிய நீர்நிலைகள் (Packed waters)

நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பொறுத்த வரையில், குடிமராமத்து பணி பெரும்பாலான கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டதால் கடந்த நவமபர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த பருவமழை விவசாயிகளுக்கு பெரிதும் கை கொடுத்துள்ளது.
அத்துடன் தற்போது பெய்த கோடை மழையின் காரணமாக, நீர்நிலைகள் நிரம்பின.

2ம் போக சாகுபடி (Cultivation to go on the 2nd)

இதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த விவசாயிகள் 2ம் போக நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.

நெல் ரகங்கள் (Paddy varieties)

முதல்கட்ட நெல் சாகுபடி தை, மாசியில் நிறைவு செய்யப்பட்ட நிலையில், பங்குனி, சித்திரை மாதங்களில் வயல்களில் ஏடிடி-45, 40, 39, கோ- 51 ரக நெல்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் கண்மாய் பாசன விவசாயிகள் கூறுகையில்,

30 ஆண்டுகளுக்குப் பிறகு (After 30 years)

பொட்டல்பச்சேரி, சிக்கல், மதினா நகர், கழநீர்மங்கலம், வல்லக்குளம், மறவாய்குடி, கீரந்தை, கொத்தங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கண்மாய் நீரைப் பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

40 மூட்டைகள் வரை (Up to 40 bundles)

ஒரு ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டைகள் வரை கிடைக்கும்.

கோரிக்கை (Request)

இரண்டாம் கட்ட சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான நெல் கொள்முதல் நிலையத்தை, சிக்கல் பகுதியில் மீண்டும் திறப்பு திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க...

அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!

பருவம் தவறிய மழையால் பாதித்தது முந்திரி விவசாயம்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

English Summary: Paddy cultivation-farmers happy to go second after 30 years! Published on: 13 June 2021, 07:24 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.