1. விவசாய தகவல்கள்

PMKSY: நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.14.64 கோடி நிதி ஒதுக்கீடு! உடனே விண்ணப்பியுங்கள்

Deiva Bindhiya
Deiva Bindhiya
PMKSY: Rs.14.64 Crore Fund Allocation for Micro Irrigation Project! Apply now

பெரம்பலூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.14.64 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாவது, விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ஆ.கீதா, தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில், 2022-2023ம் ஆண்டில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், கரும்பு, பருத்தி, மக்கச்சோளம், நிலக்கடலை, பயறு வகைகள் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 1566 ஹெக்டேர் பரப்பளவில், சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க, நிதி இலக்கு, 14.64 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

வேளாண் பயிர்களான மக்காச்சோளம், துவரை, தென்னை, பருத்தி, கம்பு பயிர்களுக்கு சொட்டுநீர் பாசன கருவிகள், நிலக்கடலை, பயறு வகைகளுக்கு தெளிப்பு நீர் கருவிகள் மற்றும் மழைத் தூவான் கருவிகளை 100 சதவீத மானியத்தில் சிறு குறு விவசாயிகள் பெறலாம்.

குறைந்த அளவு மழை பொழிவு மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைவால், கிணறுகளில் இருக்கும் குறைந்த நீரை கொண்டு, நுண்ணீர் பாசனம் மூலம், பயிரின் வேர் பகுதிக்கு மட்டும் நேரடியாக நீரை செலுத்துவதன் மூலம், 30-40 சதவீத நீரை மிச்சப்படுத்தலாம்.

அதோடு, நீரில் கரையும் உரங்கள் மூலம், 20 சதவீத மகசூல் கூடுதலாக பெறலாம். மேலும் களைகள் கட்டுப்பாடு மற்றும் குறைந்த நீர் பாசன செலவு ஆகியவற்றால் நுண்ணீர் பாசனம் மூலமாக விவசாயிகள் உற்பத்தி செலவினையும் குறைக்கலாம்.

இத்திட்டத்தில், 100 சதவீத மானியத்தில் சிறு, குறு விவசாயிகளும், பெரிய விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் பயன் பெறலாம்.

இந்த திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, சிறு-குறு விவசாயி சான்று, அடங்கல், நில வரைபடம், ரேஷன் அட்டை, கணினி சிட்டா ஆகிய ஆவணங்களுடன், வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை அணுகலாம் அல்லது www.tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்திலும் நேரடியாக பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

தமிழகம்: அடுத்த 3 நாட்களுக்கு, இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

புதிய பரிமாணங்களை கொண்ட ராஜ்பாதை, இனி கர்தவ்ய பாதை!

English Summary: PMKSY: Rs.14.64 Crore Fund Allocation for Micro Irrigation Project! Apply now Published on: 08 September 2022, 04:15 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.