MFOI 2024 Road Show
  1. விவசாய தகவல்கள்

நுணாப் பழத்தின் அபூர்வ குணங்கள்,அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்.

T. Vigneshwaran
T. Vigneshwaran

வெண் நுணா பழம் நோனி அல்லது இந்திய மல்பெரி என்று அழைக்கப்படும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும். தென்கிழக்கு நாடுகளான ஜாவா, பிலிப்பீன்சு மற்றும் ஆஸ்திரலேசியா போன்ற நாடுகளில் அதிகம் விளைந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மார்ச்-மே மாதங்களில் இதில் பூ பூக்கின்றன, மேலும் இப்பூக்களில் தேன் நிறைந்து காணப்படுகின்றன.ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்த இந்த தாவரம் கடலோரங்கள், எரிமலைத் திட்டுகள், சுண்ணாம்பு பாறைகள் போன்ற கடல்சார்ந்த இடங்களில் நன்கு வளரக்கூடியது. பசிபிக் தீவு நாடுகளில் மக்கள் இதை உணவாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். புற்று நோய்க்கு பெருமருந்தாகவும் பயன்படுகிறது. இந்த மரம் தமிழ் நாட்டின் பூர்வீக மரமான மஞ்சனத்தி மரத்தின் வகையைச்சேர்ந்தது.

வெண் நுணாவை தென்கிழக்காசிய மொழிகள் சிலவற்றில், குறிப்பாக ஓசியானிய மொழியில் நோனி என அழைக்கின்றனர். வெண் நுணாப் பழத்தின் சாரை எடுத்து அதற்கு வேறு சுவையூட்டி, சில நோய்களுக்கான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அது இந்தோனேசியாவில் சில வணிகப் பெயர்களில் காணப்படுகிறது. ஆயினும் அவர்கள் கூறும் மருத்துவ குணங்கள் வெண் நுணாவுக்கு மட்டும் சிறப்பானவையென நிரூபிக்கவில்லை.

மருத்துவப் குணங்கள்

எந்த விதமான நோயாக இருந்தாலும், அந்த நோய்க்குரிய சிகிச்சையுடன் சேர்த்து நோனி பழச்சாற்றை எடுத்துக்கொள்ளவே அறிவுறுத்தப்படுகிறது. நோனிப் பழச்சாற்றை குடிக்கும்போது, அப்படியே விழுங்கிவிடாமல் சிறிதுநேரம் வாயில் வைத்திருந்து, பிறகு விழுங்குவதால் சிறப்பான பலன் கிடைக்கக்கூடும். ஏனெனில், நோனிப்பழச் சாற்றுடன் உமிழ்நீர் சேரும்போது உடலில் உள்ள சத்துக் குறைபாடுகள் சீராக்க உதவுகின்றன.

நோயற்ற நிலையில் காலை, மாலை 1 தேக்கரண்டி (5 மில்லி) பழச்சாற்றுடன் வெந்நீர் சேர்த்துக் குடிக்கலாம்.  நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஒவ்வாமை, ஜீரணக் கோளாறு, நரம்பு மற்றும் வாத வலிகள், தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள் போன்ற அனைத்து நோய்களுக்கும் மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நோனிப்பழச்சாறு எடுத்துக்கொண்டால் பலன் கிடைக்கும்.

எலும்பு முறிவு, மூக்கடைப்பு, தீவிரக் காய்ச்சல், பல்வலி, இருமல், புற்றுநோய், ஆழமான காயங்கள் உள்ளிட்ட திடீர் மற்றும் தீவிர நோய் நிலைகளில் உள்ளவர்கள், தினமும் 6 முதல் 8 தேக்கரண்டி நோனிப்பழச்சாற்றினை இரண்டு, மூன்று வேளைகளாகப் பிரித்து எடுத்துக்கொள்வது நல்லது.

உயிருக்கு ஆபத்து நேரிடும் நோயுற்ற நிலை மற்றும் விபத்தினால் உண்டாகும் அதி தீவிர நிலையில், தகுந்த மருத்துவச் சிகிச்சைகளோடு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 மில்லி நோனிப்பழச்சாறு உட்கொண்டு வந்தால் வலிகள் குறையும். அழிவு நிலையில் உள்ள செல்களுக்கு விரைவில் புத்துயிர் கிடைக்கும். நோனிப் பழச்சாறு உடனடியாகப் புத்துணர்வை  அளிக்கும்.

பாலூட்டும் தாய்மார்கள், இதை அருந்தினால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். உடல் பலவீனமானவர்கள், நோனிப் பழச்சாற்றை நீரில் கலந்து தான் பயன்படுத்த வேண்டும். நோனிப் பழச்சாற்றைப் பூண்டுடன் எடுத்துக்கொண்டால், கொழுப்புச்சத்து குறையும்.

எச்சரிக்கை

8 வயதுக்கு மேலானவர்களுக்குத்தான், நோனிப் பழச்சாறு வழங்க வேண்டும். ஆனால், சில நோய் நிலைகளில் ஒன்று முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கால் அளவு தேக்கரண்டி; மூன்று வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு அரை தேக்கரண்டி அளவில் மருந்தாக குடுக்கலாம். ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு நோனிப் பழச்சாறு வழங்கும்போது, மலம் பிரச்சனை வராது. சாதாரண நிலையில் பெரியவர்கள் நோனிச்சாறு குடிக்கும்போது மலம் இளகி வெளியேறுவது குடல் தூய்மையாவதன் அறிகுறியாக இருக்கும்.

மேலும் படிக்க:

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த நட்சத்திர பழத்தினை பற்றி அறிவோமா?

நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்கள்

பழங்களும் அவற்றின் பலன்களும்

English Summary: Rare properties of noni fruit we should know Published on: 19 June 2021, 12:17 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.