1. விவசாய தகவல்கள்

தமிழக விவசாயிகளுக்கு ரூ. 10,000 மானியம்: அரசின் சூப்பர் திட்டம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Subsidy for Farmers

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) 2022-23ஆம் நிதியாண்டில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு (900 ஆதிதிராவிடர் மற்றும் 100 பழங்குடியினர்) தாட்கோ மூலம் கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறணைகள் வழங்க ரூ.1.00 கோடி செலவில் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 என்ற மானியம் ஒதுக்கீடு செய்து அரசாணை வரப்பெற்றுள்ளது.

விவசாயிகளுக்கு மானியம் (Subsidy for Farmers)

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 65 வயது வரையிலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறணைகள் வளர்க்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரைப்பார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும். பயனாளிகளுக்கு விதைத் தொகுப்பு, புல்கறணைகளுடன் அத்தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி, கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றுக்கான செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000 என்ற மானியத் தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தாட்கோ மாவட்ட மேலாளர் ஒவ்வொரு மாதமும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தை கண்டறிவதற்கு வழக்கமான கூட்டங்களை, மாவட்ட அளவில் நடத்தி, ஒவ்வொரு பயனாளியின் புகைப்பட ஆவணங்களை கட்டாயம் பராமரிக்க வேண்டும். தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

மேலும் ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்தவர்கள் http://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் http://fast.tahdco.com என்ற இணையதளத்தில் குடும்ப அட்டை, சாதி சான்று , வருமான சான்று, இருப்பிட சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம், திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி எதிரில், நாகை பைபாஸ் ரோடு, திருவாரூர் என்ற முகவரியிலும், 04366-250017 மற்றும் 9445029478 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து மேற்குறிப்பிட்டுள்ள திட்டத்தில் பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பென்சன் தொகையை சேமிக்க நினைப்பவரா நீங்கள்? தங்க முதலீடு தான் பெஸ்ட்!

English Summary: Rs. 10,000 Subsidy for Tamilnadu farmers: Govt's super scheme! Published on: 26 November 2022, 10:54 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.