1. விவசாய தகவல்கள்

ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.75 மானியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 75 subsidy for a liter of diesel

விவசாய கிணறுகளில் டீசல் இன்ஜின் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.75 மானியம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாய முன்னேற்றக்கழக தலைவர் செல்லராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :

டீசல் இன்ஜின் (Diesel engine)

தமிழகத்தில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு இலவச மின் இணைப்பு கிடைக்காமல் உள்ள ஏராளமான விவசாயிகள் டீசல் இன்ஜினை பயன்படுத்தி தண்ணீர் இரைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

விவசாயக் கருவிகள் (Agricultural Tools)

மேலும் அனைத்து விவசாயத் தோட்டங்களிலும், டிராக்டர்கள், நாற்று நடும் இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு விவசாயக் கருவிகள் டீசலைப் பயன்படுத்தி இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டு வருகிறது. இதனால் அதிக விலை கொடுத்து டீசலை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் உற்பத்தி செலவு மிகவும் அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா, இயற்கை சீற்றங்கள், விலை வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

மானியம் தேவை (Grant required)

எனவே, டீசல் இன்ஜின்களை பயன்படுத்தும் விவசாயிகளை அரசுத்துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுத்து, புள்ளி விவரங்கள் அடிப்படையில் அவர்களுக்கென தனி அடையாள அட்டைகள் வழங்கி டீசல் இன்ஜின் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மட்டும் ஒரு லிட்டர் டீசலுக்கு மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்சம் ரூ.75 மானியம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளையில் டீசல் விலை தொடர்ந்து விலை உயர்ந்துகொண்டே இருப்பதால் டீசல் இன்ஜினை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பு கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

அரசு பரிசீலிக்குமா?

அல்லது 100 சதவீதம் மானியத்துடன் சூரிய மின் மோட்டார் அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன்கருதி, இந்த கோரிக்கையை திமுக அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

சம்பா பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Rs 75 subsidy for a liter of diesel Published on: 03 November 2021, 07:56 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.