1. விவசாய தகவல்கள்

Rythu Bandhu Scheme: விவசாயிகளுக்கு ரூ.5000 வழங்கும் அரசு

Deiva Bindhiya
Deiva Bindhiya
Rythu Bandhu Scheme: Government provides Rs.5000 to farmers

ரைது பந்து திட்டத்தின் கீழ், குறுவை பருவத்திற்காக, ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் 28 டிசம்பர் 2021 முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

மேலும், குறுவை பருவத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவோ, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படவோ கூடாது என்றும், தெலுங்கானாவில் இருந்து அரிசியை வாங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் அவர் வலியுறுத்தினார்.

பிரகதி பவனில்(Pragati Bhavan) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மத்திய அரசின் நிலைப்பாட்டை அடிமட்ட அளவில் உள்ள விவசாயிகளிடம் நேரில் சென்று விளக்கி, நடப்பாண்டில் நெல் விதைத்து நஷ்டத்தில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிசம்பர் 28 முதல் 10 நாட்களுக்குள் மாநிலத்தில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரைது பந்து நிதியை வழங்குமாறு தெலுங்கனா முதலமைச்சர் ராவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ரைது பந்து திட்டத்திற்கு அரசு எந்த தடையும் விதிக்காது என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகளிடம் இருந்து மாநில அரசு நெல் கொள்முதல் செய்யும் கேள்வியே இல்லை என்பதால், குறுவை பருவத்தில் நெல் விதைத்து, பிற்காலத்தில் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் ரைது பந்து திட்டத்தின் கீழ் நீங்கள் பயனடைவீர்களா என எப்படி சரிபார்ப்பது?

Rythu Bandhu பட்டியலை சரிபார்ப்பது எப்படி?

புதுப்பிக்கப்பட்ட பயனாளிகளின் பட்டியலைச் சரிபார்க்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றவும்:

  • திட்டத்தின் ஆதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும்
  • முகப்புப்பக்கத்தில் பயனாளிகளின் பட்டியலைப் பார்க்கவும்
  • விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்
  • பயனாளிகளின் பட்டியல் திரையில் தோன்றும்
  • பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்கவும்

Rythu Bandhu-வில் உங்களது நிலையை எவ்வாறு சரிபார்ப்பது

உங்கள் நிலையைச் சரிபார்க்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்:

  • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
  • இப்போது பக்கத்தில் உள்ள ‘Rythu bandhu Scheme Rabi Details’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பின்னர் ஆண்டு, வகை & PPB எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  • "சமர்ப்பி" பொத்தானைக் கிளிக் செய்யவும்

இவ்வாறு நீங்கள் உங்களுக்கு தேவையான தகவல்களைப் பெற முடியும்.

மேலும் படிக்க:

6 நாட்கள் வங்கிகள் முடக்கம்! எப்போதிலிருந்து? ஏன்?

அரசு: உரம் விநியோகத்திற்கு உதவி மையம்! வாட்ஸ்அப் மூலமும் உதவி

English Summary: Rythu Bandhu Scheme: Government provides Rs.5000 to farmers Published on: 22 December 2021, 11:08 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.