1. விவசாய தகவல்கள்

மரம் நட போறீங்களா...... இதையும் கொஞ்சம் கவனிங்க!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

வேளாண் பெருமக்கள் தங்களின் மண்வாகுபொருளாதார தேவையைக் கருத்தில் கொண்டு வேளாண் நிலங்களில் வரப்பு ஓரமாகவோஊடுபயிராகவோ பல்வகை சாகுபடியாகவோ வேளாண் பயிர்களோடு மர வகைகளை வளர்க்க வேண்டும்.  இதனால் காடுகள் பரப்பளவு அதிகரித்து சுற்றுச்சூழல் வளம் பெருகுவதுடன் கிராமியப் பொருளாதாரமும் மேம்படும்.   

வேளாண்மைக்கு உதவாத தாரிசு நிலங்கள்களர்உவர் நிலங்கள்மணற்பாங்கான அல்லது நீர் தேங்கும் இடங்கள்மானாவாரி நிலங்கள் போன்றவற்றில் 10-30 சதவீதம் வரையிலும் மரங்கள் வளர்க்கலாம்.

மரங்களைத் தேர்வு செய்யும் முறை

வேளாண் காடுகள் வளர்ப்பில் மரத்தேர்வு மிகவும் முக்கியமானதாகும். நமது பகுதிகளில் கிடைக்கும் மழை அளவிற்கு ஏற்றவாறு மரங்களைத் தேர்வு செய்யலாம். மழை அளவு 400-600 மி.மீ வரை உள்ள பகுதிகளுக்கு வேம்பு, வெள்வேல், குடைவேல், சவுண்டல், பரம்பை போன்ற மரங்கள் ஏற்றது. மழை அளவு 600-800 மி.மீ அளவு உள்ள பகுதிகளுக்கு வேம்பு, வாகை, பெருமரம், இலுப்பை, புங்கம், புளி, ஆச்சா, ஆயமரம், நாவல், பூவரசு, அரப்பு மரங்கள் ஏற்றது மழை அளவு 800 மி.மீக்கு மேல் உள்ள பகுதிகளுக்கு வேம்பு, இலவம், தேக்கு, மூங்கில், சவுக்கு போன்ற மரங்கள் பயிர் செய்யலாம்.

மண்ணுக்கேற்ற மர வகைகள்

கரிசல் மண்                   

சவுண்டல்வேம்புபுளிஇலுப்பைநுணாபுங்கம்,  ஆயமரம்

செம்மண்             

வாகைபரம்பைசவுக்குஆயிலைமான்காதுவேல்புளி

செம்புறைமண்             

தைலம்வேள்வேல்முந்திரி

வண்டல்              

வேம்புவாகைதேக்குமூங்கில்புளி

களர்நிலம்            

சீமைக்கருவேல்வேம்புவாகைசவுண்டல்,  கருவேல்

உவர் நிலம்                   

சவுக்குபுங்கம்இலவம்புளிவேம்பு

அமில நிலம்                       

தைல மரம்,  கத்திவேல்

சுண்ணாம்பு படிவ நிலம்   

புளிவேம்புபுங்கம்

மணற்பாங்கு நிலம் 
               
சீமை கருவேல்வாகைஅரப்புசவுக்கு


மரசாகுபடி யுத்திகள்          

  • பண்ணை ஓரங்களில் எரிபொருள் தேவை பூர்த்தி செய்யும் பெருமரம், நெட்டிலிங்கம்மட்டிகடம்ப மரங்களை வளர்க்கலாம். 

  • பண்ணை வேலி அமைக்கப் பயன் தராத கள்ளி செடிகளுக்குப் பதிலாகத் தீவன மரங்கள்,  குறைந்த உயரம் வளரும் மரங்களை வளர்க்கலாம்.

  • மானாவாரி நிலங்களில் வாகைஅயிலைவேம்புகருவேல் போன்ற மரங்களுடன் சோளம்தட்டைப்பயறுகம்புதினைசாமைவரகுஎள்கொள்ளுஉளுந்து போன்ற பயிர்களைப் பயிர் செய்யலாம்.

  • காய்ப்பதற்கு அதிக வருடம் எடுக்கும் மா, சப்போட்டாஎலுமிச்சை போன்ற பழுமரங்களைத் தேக்குசவுக்கு போன்ற வனமரங்களுடன் சாகுபடி செய்யலாம். 

  • 20 முதல் 30 ஆண்டுகளில் நீண்டகால மர சாகுபடிக்குத் தேக்குஈட்டிகுமிழ்,  மகாகனி சிசுபலா பிள்ளை மருதுவாகை மரங்களைப் பயரிட்டு உருட்டு மரங்களாக விற்பனை செய்ய முடியும்

டாக்டர் கே.சி சிவபாலன் 
வேளாண் ஆலோசகர் திருச்சி

மேலும் படிக்க... 

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!

தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டுகள் தாக்குதல் - தடுப்பது எப்படி!!

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற பயன்படும் மாடித்தோட்டம்!!

English Summary: Things to consider when planting trees on agricultural lands

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.