
TNAU: Training in making valued products from mushroom and drumstick
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி 13.09.2022 மற்றும் 14.09.2022 ஆகிய நாட்களில் நடைபெறும். கீழ்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும்.
முருங்கை முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ்
காளான் - காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், பிழிதல் தொழில் நுட்பம்
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1770 (ரூ.1500 + GST 18%)-பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும். எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி நடைபெறும் இடம் - அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641003.
மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641003, தொலை பேசி எண் - 0422-6611268.
மேலும் படிக்க:
12-ந்தேதி முதல் கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அடுத்ததாக குருணை ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு: ஏன்?
Share your comments