1. விவசாய தகவல்கள்

கடலூர்- கரூர் மாவட்ட KVK சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி- முழு விவரம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Training for farmers on behalf of KVK

வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மாதந்தோறும் விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் மற்றும் கடலூர் கே.வி.கே சார்பில் செப்டம்பர் மாதம் நடைப்பெறும் பயிற்சி குறித்த முழுவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த மாதம் கரூர் மாவட்டம் புழுதேரி கிராமத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தில் நடைப்பெறும் பயிற்சி (அனைத்து பயிற்சியும் ஒரே இடத்தில்) தொடர்பான தகவல்களை முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர். ஜெ.திரவியம் வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம்:

செப்டம்பர் 2023 மாத இலவச பயிற்சிகளின் விபரம்:

 • 6.9.23- அங்கக முறையில் நெல் சாகுபடி மற்றும் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல்- 9659098385
 • 8.9.23-மண்வள மேலாண்மை குறித்த பயிற்சி - 9944996701
 • 12.9.23- சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்- 9750577700
 • 13.9.23- மூலிகை பயிர்களான முடக்கத்தான், ஆவாரம் பூவிலிருந்து ஊறுகாய் தயாரித்தல்- 9750577700
 • 14.9.23- தேனீ வளர்ப்பு- 98438883221
 • 16.9.23- வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை- 7904020969
 • 21.9.23- கறவை மாடுகளில் மடி நோய் மேலாண்மை- 6380440701
 • 22.9.23- கொய்யா சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள்- 9566520813
 • 26.9.23- ஒருங்கிணைந்த முறையில் பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள்- 9659098385
 • 27.9.23- காளான் வளர்ப்பு- 7904020969
 • 29.9.23- சோள பயிர் சாகுபடியில் அங்கக இடுபொருள் பயன்படுத்துதல்- 9944996701

மேற்குறிப்பிட்ட பயிற்சியில் கலந்துக்கொள்ள முன்பதிவு அவசியம். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண், 9790020666.

கடலூர், வேளாண்மை அறிவியல் நிலையம் (கே.வி.கே) சார்பில் செப்டம்பர் மாதம் நடைப்பெறும் பயிற்சிகள் விபரம்:

 • 07.09.2023- சிறுதானியதில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் - இடம்: மனகொல்லை
 • 08.09.2023- கரும்பு பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை - இடம்: கூடலையாத்தூர்
 • 12.09.2023- களர்நில மேலாண்மை - இடம்: சின்ன கொமட்டி
 • 14.09.2023 திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் -இடம்: மணல்மேடு
 • 15.09.2023- தேனீ வளர்ப்பு - இடம்: கே.வி.கே கடலூர்
 • 19.09.2023- திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள்- இடம்: திருமலை அகரம்
 • 20.09.2023- பலா பழத்தில் மதிப்புக்கூட்டுதல்- இடம்: விருதகிரிகுப்பம்
 • 21.09.2023- திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள்- இடம்: கே.வி.கே கடலூர்
 • 21.09.2023- காய்கறி பயிர்களில் இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி தொழில்நுட்பங்கள்- இடம்: மணகொல்லை
 • 22.09.2023- பயறு வகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்- இடம்: அடரி
 • 27.09.2023- மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை- இடம்: கீழ்செறுவாய்
 • 29.09.2023- சிறுதானிய பயிர்களில் இயற்கை விவசாயம், இடம்: நந்தபாடி

மேற்குறிப்பிட்ட பயிற்சி விபரங்களை கடலூர் வேளாண்மை அறிவியல் நிலை திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண்: 04143- 238353, கைபேசி எண்: 99943 15004.

மேலும் காண்க:

6 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வறட்சி நிவாரண நிதி

PM kisan அடுத்த தவணை- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

English Summary: Training for farmers on behalf of KVK of Cuddalore-Karur district Published on: 06 September 2023, 02:30 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.