1. விவசாய தகவல்கள்

தொழில் அதிபர் ஆக விருப்பமா? TNAU வழங்கும் அருமையான வாய்ப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Want to become an entrepreneur? Fantastic opportunity provided by TNAU!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிகமுறையிலானக் காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிக்கும் குறித்த பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. இதனை விவசாயிகளும், தொழில் முனைவோரும், இளையத் தலைமுறையினரும்  சரியாகப் பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொழில்முனைவோராக மாற (Become an Entrepreneur)

சான்று பெற்ற பயிர் ரகங்களை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சாகுபடித் தொழில்நுட்பம், அதிக மகசூலுக்கான சூட்சமம் என விவசாயத்திற்கு இன்றியமையாத விஷயங்களையும் வேளாண் பல்கலைக்கழகம் கற்றுக்கொடுத்து வருகிறது. குறிப்பாக, தொழில் முனைவோராக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதிலும், வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பணி இன்றியமையாதது.

2 நாள் பயிற்சி (2 days training)

இதன் ஒருபகுதியாக, தொழில்முனைவோராக மாற விரும்புவோரை ஊக்குவிக்கும் வகையில், வணிகமுறையிலானக் காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிக்கும் 2 நாட்கள் பயிற்சி நடைபெறவுள்ளது. இப்பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் 26.04.2022 மற்றும் 27.04.2022 தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சி முகாம் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

இதில் கீழ்கண்ட உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.

  • உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் (Dehydrated vegctables and fruits)

  • பலவகை பழ ஜாம் (Mixed fruit jam)

  • பழரசம் (Squash)

  • தயார் நிலை பானம் (Ready - to - serve beverage)

  • ஊறுகாய் (Pickles)

  • தக்காளி கெட்சப் (Tomato ketchup)

  • ஊறுகனி (Candy)

  • பழப்பார் (Fruit bar)

கட்டணம்

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,770/- (ரூபாய் ஆயிரத்து எழுநூற்று எழுபது பட்டும்) (ரூ-1500+ GST 18% ) - செலுத்தி பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சி கட்டணத்தை பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், கோயமுத்தூர் -3 என்ற பெயரில் வங்கி வரைவோலையாக எடுத்து, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 0422 - 6611268 என்றத் தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும். வேளாண் பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சி தொழில் முனைவோராக விரும்புவோர், தங்களது வருமானத்தைப் பெருக்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க...

6 மாதம்தான்- இல்லையேல், ரேஷன் Card ரத்து!

ஆலிவ் Oilலை அதிகம் பயன்படுத்தினால் பக்கவாதம் ஏற்படுமா?

English Summary: Want to become an entrepreneur? Fantastic opportunity provided by TNAU! Published on: 21 April 2022, 11:47 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.