1. விவசாய தகவல்கள்

25 வருட இயற்கை விவசாயத்தால் கற்றுக்கொண்டது என்ன?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Organic farming

இயற்கை விவசாயம்:- எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல்‌ இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கை உரங்களை தயாரித்து அதன் மூலம் செய்யப்படும் விவசாயமே இயற்கை விவசாயம்..இது மட்டுமல்ல இயற்கை விவசாயம். இதுவும் ஒன்று தான் ஆனால் முழுமையான பதில் இது கிடையாது இதில் நாம் புரிந்து கொள்ளக்கூடிய முக்கியமான ஒரு தகவல்கள் இருக்கிறது

இயற்கை விவசாயம் ஏன் பேசுபொருளாக மாறி வருகிறது:- சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது... என்ன சுற்றுச்சூழல் சீர்கேடு என்றால் பல்லுயிர் பெருக்க அமைப்புகளில் தாவர உலகில் ஒரு சில வகைகளும் விளங்கினத்தில் ஒரு சில வகைகளும் கிட்டத்தட்ட தொடர்ந்து அழிந்து கொண்டே வருகிறது.

இது போன்ற நிறைய ஜீவன்கள் குறைவதாலும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும்.. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒரு விஷயம் இவற்றை பாதுகாப்பதற்கு இயற்கை விவசாயமே அடிப்படையானது..

உணவு தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யும்

நாம் எல்லோருக்கும் உணவு என்பது அவசியமான ஒன்று இந்த உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றால் இயற்கை விவசாயம் மட்டுமே அதைப் பூர்த்தி செய்யும்.. அது எப்படி? எங்களிடம் தான் அரிசி இருக்கே உணவு இருக்கே அரசு மாத மாதம் அரிசியும் தருகிறதே தட்டுப்பாடு இன்றி தான் கிடைக்கிறது என்றால், அரிசி கோதுமை மட்டும் உணவு கிடையாது.. சிறுதானியங்களும் உணவே.. இயற்கை விவசாயம் மட்டுமே ஊட்டச்சத்து நிறைந்த உணவு தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யும்.

அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்

இயற்கை விவசாயம் ஊட்டச்சத்து இவை எல்லாம் சரிதான் ஆனால் இவை எல்லாம் நம்மால் வாங்க முடியுமா? என்றால் நிச்சயம்முடியும், உதாரணத்திற்கு ஒரு காலத்தில் சர்க்கரையின் விலை அதிகமாகவும் வெள்ளத்தின் விலை மிக குறைவாகவும் இருந்தது தற்போது எங்கும் சர்க்கரை ஆலைகள் விவசாயிகள் எங்கு பார்த்தாலும் கரும்பு பயிரிட்டு வரும் நிலையில் சர்க்கரை மிக எளிதில் கிடைக்கிறது விலை குறைவாகவும் இருக்கிறது.

வெள்ளம் அப்படி அல்ல சற்று விலை அதிகம் தான் உற்பத்தியின் அளவு அதிகரிக்கும் போது எளிய மக்களும் எளிதாக வாங்க முடியும். கண்டிப்பாக அப்படி ஒரு நிலை வரும்போது கருப்பு கவுனி அரிசி எல்லாம் 50 ரூபாய்க்கு எளிதாக கிடைத்துவிடும்... இலவசமாக கிடைக்க வேண்டுமென்றால் அது அரசின் கையில் மட்டுமே உள்ளது.. இவையெல்லாம் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நடக்கும் இந்த பூமியை இயற்கை விவசாயம் மீண்டும் ஆளும். தற்போது கூட ஒரு சில இடங்களில் 70 ரூபாய்க்கு இயற்கையாக விளைந்த அரிசி கிடைக்கிறது.

மேலும் படிக்க:

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000

கலர் மீன்களை வளர்த்து லாபம் ஈட்டி வரும் விவசாயி!

English Summary: What have you learned from 25 years of organic farming? Published on: 20 April 2023, 07:10 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.