Central

Tuesday, 27 April 2021 09:01 AM , by: Elavarse Sivakumar

Credit : You Tube

உங்கள் பெயரில் உள்ள நிலத்தில் வீடு கட்ட விரும்பினால், அதற்காக மத்திய அரசு ரூ.2.67 லட்சம் மானியம் கொடுக்கிறது.

மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் எவ்வளவு மானியம் கிடைக்கும் என்பதே பலருக்குத் தெரியவில்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக மத்திய மோடி அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

ரூ.2.67 லட்சம் மானியம் (Rs.2.67 lakh Subsidy)

அவற்றுள் மிக முக்கியமான திட்டம்தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இத்திட்டத்தின் கீழ் வீடற்ற ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவியைப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் ரூ.2.67 லட்சம் வரையில் மானிய உதவி பெறலாம்.

தகுதி (Qualification)

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயன் பெறுவதற்கு வாடிக்கையாளரின் ஆண்டு வருமானம் நான்கு பிரிவுகளின் கீழ் இருக்க வேண்டும். 

அதாவது,

  • உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

  • உங்களது ஆண்டு வீட்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ .6 லட்சம் வரை.

  • உங்கள் ஆண்டு வீட்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம்.

  • உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ .12 லட்சத்துக்கு மேல் ஆனால் ரூ.18 லட்சத்துக்குக் குறைவாக இருப்பது.

மற்றொரு நிபந்தனை (Another condition)

மற்றொரு நிபந்தனை என்னவென்றால், வாடிக்கையாளர் வேறு எந்த அரசாங்க வீட்டுத் திட்டங்களின் பலனையும் பெற்றிருக்கக் கூடாது. இத்திட்டத்தில் இணைவதே முதல் முறையாக இருக்க வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படவில்லை (Awareness did not occur)

  • இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அதிகபட்ச மானியம் ரூ.2.67 லட்சம் என்பதே பலருக்குத் தெரியவில்லை.

  • வெறும் 17 சதவீதத்தினருக்கு மட்டுமே விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது.

அதிகபட்ச மானியம் (Maximum Subsidy)

அதேபோல, 48 சதவீதத்தினருக்கு எந்தப் பிரிவுக்கு அதிகபட்ச மானியம் கிடைக்கும் என்பதே தெரியவில்லை. அதேபோல, இத்திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன் வாங்கினால் எத்தனை மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதே தெரியவில்லை.

மேலும் படிக்க...

PM Kisan: பி.எம்-கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற ஜூன் 30க்குள் பதிவு செய்யுங்கள்!

RBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவசாயிகளுக்கு என்ன பயன்?

முத்ரா கடன்தாரர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு போனஸ்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)