Krishi Jagran Tamil
Menu Close Menu

PM Kisan: பி.எம்-கிசான் திட்டத்தில் அடுத்த தவணை பெற ஜூன் 30க்குள் பதிவு செய்யுங்கள்!

Friday, 26 June 2020 04:14 PM , by: Daisy Rose Mary

Credit by : Dinamani

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இது வரை நீங்கள் இணையவில்லை என்றாலும், தகுதி பெற்று இருப்பவர்கள் வருகிற ஜூன் 30ம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 4000 ரூபாய், அதவாது 2 தவணைகளை நீங்கள் பெற முடியும்

PM-Kisan திட்டம்

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் முக்கிய திட்டமாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana ) அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. மூன்று தவணையாக தலா ரூ. 2000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

இதற்கான முதல் தவணை டிசம்பர் முதல் மார்ச் வரையும். இரண்டாவது தவணை ஏப்ரல் முதல் ஜூலை வரையும் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது தவணை வருகிற ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படவுள்ளது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தியாக பிரதமர் கிசான் திட்ட விதிகளின் படி, நீங்கள் ஜூன் மாதத்தில் விண்ணப்பித்து உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இரண்டு தவணைகளை நீங்கள் பெற முடியும். அதவாது, ஏப்ரல் மாதத்திற்கான தவணை ஜூலை மாதத்தில் பெறப்படும், ஆகஸ்ட் மாதத்தின் புதிய தவணையும் உங்கள் கணக்கில் வரும்.

இது வரை நீங்கள் இந்த திட்டத்தில் இணையவில்லை எற்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி இந்த திட்டத்தில் இணைந்து உடனே உங்களுக்கான பலனை பெற்றுக்கொள்ளுங்கள்

பிரதமர்-கிசான் பயனாளிகள் எவ்வாறு அடையாளம் காணப்படுகிறார்கள்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றப்பட்ட பின்னர் பயனாளிகளை அடையாளம் காணவும், அவர்களின் கணக்கிற்கு பணம் அனுப்பவும் "நில உரிமையாளர் முறையை" நடைமுறையை பயன்படுத்துமாறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி தகுதியான பயனாளிகளை அடையாளம் காண்பது மற்றும் அவர்களின் விவரங்களை பிரதமர்-கிசான் போர்ட்டலில் பதிவேற்றுவது முழுவதும் மாநில அரசுகளின் பொறுப்பாகும். விவசாயிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவுடன், மாநில / யூனியன் பிரதேசத்தின் அரசாங்கங்களுக்கு இது குறித்து விசாரிக்க உரிமை உண்டு. எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் பலன்கள் வழங்கப்படும்.

Credit by : Asianet tamil

PM-Kisan திட்டத்தின் கீழ் சேர தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்கள்

  • பெயர் (Name)மற்றும் வயது (Age)

  • பாலினம் (Gender)மற்றும் வகை(எஸ்சி / எஸ்டி) (Catefory -SC/ST)

  • வங்கி கணக்கு எண் (Bank Account Number) மற்றும் ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு (IFSC Code)

  • கைபேசி எண் (Mobile number)

  • செல்லுபடியாகும் ஆதார் எண் (Valid Aadhaar number)

PM-Kisan விண்ணப்ப நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் - pmkisan.gov.in

  • முகப்புப்பக்கத்தில் 'Farmers Corner' என்பதைக் கிளிக் செய்க.

  • இப்போது ''beneficiary status' என்பதைக் கிளிக் செய்க.

  • தேவையான விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.

  • நேரடியாக உங்களின் நிலை குறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும். 

PM-Kisan புதிய பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம்

அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று Farmers Corner-ல், beneficiary list என்பதை கிளிக் செய்க. தேவையான விவரங்களை நிரப்பவும், நீங்கள் பட்டியலைப் பெறுவீர்கள்.
PM-Kisan பட்டியலை சரிபார்க்க கிளிக் செய்க

மேலும் விவரங்களுக்கும், எந்தவொரு சந்தேகங்களுக்கு எங்கள் ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

  • ஹெல்ப்லைன் - 155261
  • கட்டணமில்லாது - 1800115526
  • லேன்ட் லைன் நம்பர் - 011-23381092, 23382401

மேலும் படிக்க...

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2021 டிசம்பருக்குள் முடிக்க திட்டம்

RBI கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - விவசாயிகளுக்கு என்ன பயன்?

முத்ரா கடன்தாரர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு போனஸ்

PM - Kisan PM Modi Farmers பிஎம் கிசான் விவசாயிகள் தவணை பி எம் கிசான் திட்டம் விவசாயிகள் உதவித் திட்டம்
English Summary: PM Kisan scheme money coming soon, done your registration before June 30

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு!!
  2. ஆண்டுக்கு ரூ.100 மட்டுமே! - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்!
  3. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு!
  4. நாமக்கல்லில் நவராத்திரியையொட்டி பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு!
  5. விலை உயர்ந்தால் நியாயவிலைக் கடைகளில் வெங்காயம்! - அமைச்சர் காமராஜ் ஐடியா!
  6. வட தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு; விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் கன மழை இருக்கும்!!
  7. மரங்களை அடகு வைத்தால், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்! கேரளாவில் புதிய திட்டம்!
  8. குளிருக்கு ஏற்ற இயற்கை குடில்- பாரம்பரிய உணவுகளையும் ருசிக்கலாம் வாங்க!
  9. இந்திய ராணுவத்தில் 199 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமனம்- விண்ணப்பிக்க நவம்பர் 11 வரை காலக்கெடு!
  10. பயிர்களின் ஹார்மோனாக மாறி உயிரூட்டும் டிரைக்கோடெர்மா விரிடி!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.