கல்வித்தொகை வழங்கும் திட்டத்தில் மாற்றம்: மாணவர்கள் மதிப்பெண் மூலம் தேர்வு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Change in PM Yasasvi scholarship scheme: Students selected by marks!

PM Yasasvi திட்டம் மூலம் வழங்கப்படும், கல்வி உதவித்தொகை வழங்க தேர்வு மூலம் தேர்வு செய்யப்படயிருந்த நிலையில் தற்போது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் மதிப்பெண் மூலம் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க பதிவை தொடருங்கள்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக 29 செப்டம்பர் 2023 அன்று நடைபெறவிருந்த எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9/ 11 ஆம் வகுப்பு பயின்றுவரும் 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தேர்வு முகமையால் 29.09.2023 அன்று நடத்தப்படவிருந்த YASASVI நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேற்படி எழுத்துத் தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 8 மற்றும் 10ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) தொடர்ந்து நோக்கி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

முதியோர் உதவித் தொகை திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?

SBI ஆஷா உதவித்தொகை ரூ.15,000; ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

English Summary: Change in PM Yasasvi scholarship scheme: Students selected by marks! Published on: 10 October 2023, 02:58 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.