தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கான 10 மானியத் திட்டங்கள் !

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Thanjavur district farmers

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விரிவான பொருள் இலக்கு மற்றும் நிதி இலக்கு கீழ்க்கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1.தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM): தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் 856 எக்டர், 1378 எண்கள், 9000 ச.மீ பொருள் இலக்கு மற்றும் ரூ 227.809 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்திட 50% நிதியதவியுடன் பழச்செடிகள் மற்றும் காய்கறிகள் சாகுபடி மேம்படுத்தும் பொருட்டும் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும் நிதி இலக்கு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

2.வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் (SMAM) 2023-2024

வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தின்கீழ் 169 எண்கள் பொருள் இலக்கு மற்றும் ரூ.55.4065 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்திட விவசாயிகளுக்கு விசை இயந்திரங்களை 50 % நிதியுதவியுடன் இயந்திரமாக்குதல் இனத்தின்கீழ் செயல்படுத்திட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

3.தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் (NADP) 2023-2024

இத்திட்டத்தின்கீழ் 2023-2024 நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு முருங்கை பரப்பு விரிவாக்கம் மற்றும் பந்தல் காய்கறிகள் சாகுபடி இனத்திற்கு 37.50 எக்டர் பொருள் இலக்கு மற்றும் ரூ.8.50 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டு இத்திட்டம் 40 % மற்றும் 50 % நிதியுதவியுடன் பல்வேறு இனத்தின்கீழ் செயல்படுத்திட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

4.பனை மேம்பாட்டு இயக்கம்: (பனை அபிவிருத்தி பணி) (2023-2024)

இத்திட்டத்தின் கீழ் 2023- 2024 நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் விநியோகம் செய்ய 36250 எண்கள் பொருள் இலக்கு மற்றும் ரூ.1.51 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

5.மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் (SHDS) 2023-2024

இத்திட்டத்தின்கீழ் 2023-2024 நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு காய்கறி, பழப்பயிர்கள் பரப்பு விரிவாக்கம், பழச்செடி தொகுப்பு விநியோகம் மற்றும் மாடித்தோட்ட தளைகள் வழங்குதல் இனத்திற்கு 225 எக்டர், 8775 எண்கள் பொருள் இலக்கு மற்றும் ரூ. 41.835 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டு இத்திட்டம் 40 % மற்றும் 50 % நிதியுதவியுடன் பல்வேறு இனத்தின்கீழ் செயல்படுத்திட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

Read more: நச்சலூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஆணிவேர்- கீழப்பட்டி கரிகாலனின் வெற்றிக்கதை

6.தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் (TNIAMP) 2023-2024

இத்திட்டத்தின்கீழ் 2023-2024 நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 3438 எக்டர்/ சமீ எண்கள் பொருள் இலக்கு மற்றும் நிதி இலக்கு ரூ.84.50 இலட்சம் பெறப்பட்டு திட்டம் செயல்படுத்திட விவசாயிகளை தேர்வு செய்து, 75 % மற்றும் 100 % மானியத்தில் விவசாயிகள் பயன்பெற பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

7.பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் (PMKSY) 2023-2024

பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 1600 எக்டர் பொருள் இலக்கு மற்றும் ரூ. 1328 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சொட்டுநீர், தெளிப்பு நீர் மற்றும் மழைத்தூவான் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 எக்டர் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன் பெறலாம்.

Read more: பூந்தோட்ட மின் இணைப்புக்கு இலவச மின்சாரம்- விவசாயிகள் கோரிக்கை

8.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்:(KAVIADP)

கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் 118 கிராமங்கள் தேர்வு செய்து, தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பு விரிவாக்கம், ஊட்டச்சத்து பழச்செடி தொகுப்புகள் வழங்குதல் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல் இனத்திற்கு 275 எக்டர், 35400 எண்கள் பொருள் இலக்கு மற்றும் ரூ. 80.355 இலட்சம் நிதி இலக்கில் 75 % மற்றும் 50 % மானியத்தில் திட்டம் செயல்படுத்திட இலக்கு பெறப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

9.தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை: (NMEO- Oil Palm)

இத்திட்டத்தின்கீழ் 2023-2024 நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பரப்பு விரிவாக்க இனத்திற்கு 75 எக்டர், 69 எண்கள் பொருள் இலக்கு மற்றும் ரூ. 88.24 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசு பங்களிப்புடன் 100 சதவிகித மானியத்தில் திட்டம் செயல்படுத்திட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

10.தேசிய மூங்கில் இயக்கம்: (NBM) 2023-24

இத்திட்டத்தின்கீழ் 2023-2024 நிதியாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அரசு அல்லது பொது நிலங்களில் 28 எக்டர், தனியார் நிலங்களில் 5 எக்டர் பொருள் இலக்கு மற்றும் ரூ 15.25 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்திட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டங்களின் பயன்களை பெற பயனாளிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அனுகியோ அல்லது tnhorticulture.tn.gov.in (TN-HORTNET) இணையதளத்தில் பதிவு செய்தோ பயன் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

read more:  குறுவை பரப்பிற்கு நிவாரணம்- அறிக்கை அனுப்பிய தஞ்சை மாவட்ட நிர்வாகம்

English Summary: 10 subsidy schemes for Thanjavur district farmers Published on: 03 December 2023, 01:27 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.