உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடி வலைகள் வாங்க 50 % மானியம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
50 percent subsidy for buy fishing nets

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வாங்கிட 50 விழுக்காடு மானியம் வழங்குதல் திட்டம் குறித்தும், ஒப்பந்த அடிப்படையில் சாகர் மித்ரா பணியாளர் தேர்வு செய்யப்படுவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன்வளர்ப்பினை ஊக்குவித்திடவும், மீன் உற்பத்தியினை பெருக்கிடவும், அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில், உள்நாட்டு மீனவர்களை ஊக்குவித்திடும் விதமாக மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்கள் / உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீன்பிடி வலைகள் வாங்கிட ஒரு அலகிற்கு ஆகும் செலவினமான ரூ.20,000/- ல் 50% பின்னிலை மானியம் ரூ.10,000/- வழங்கப்படுகிறது.

எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் நாகப்பட்டினம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்படி திட்டத்தில் மானிய தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் மற்றும் பெறப்படும் விண்ணப்பங்கள் மூப்புநிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

சாகர் மித்ரா பணியாளர் தேர்வு குறித்த அறிவிப்பாணை:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர் (சாகர் மித்ரா) தேர்வு செய்தல் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

  • பணியிடம்- வாய்மேடு மீனவ கிராமம் நாகப்பட்டினம்
  • காலியிடம் எண்ணிக்கை- 01

கல்வி தகுதி: குறைந்தபட்ச கல்வி தகுதி இளங்கலை பட்டபடிப்பில் தேர்ச்சி ( மீன்வள அறிவியல்(Fisheries Science) / கடல் உயிரியல்(Marine Biology) / விலங்கியல்(Zoology). மேற்கண்ட கல்வி தகுதியில் விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில் பிற கல்வியான வேதியல்(Chemistry) / தாவரவியல்(Botany) / உயிர் வேதியியல்(Bio-chemistry) / நுண்ணுயிரியல்(Micro biology) / இயற்பியல்(Physics) தகுதியானதாக கருதப்படும். மேலும் தகவல் தொழில்நுட்பம் அறிந்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

தகுதி வரம்புகள்: விண்ணப்பதாரர் தொடர்புடைய மாவட்டத்தில் சம்மந்தப்பட்ட வட்டத்தில் மீனவ கிராமம் / வருவாய் கிராமத்தை சேர்ந்த உள்ளூர் நபராக இருத்தல் வேண்டும். சம்மந்தப்பட்ட மீனவ கிராமம் / வருவாய் கிராமம் / தாலுக்காவில் விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் சம்மந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள அண்மை கிராமம் / வருவாய் கிராமம் / வட்டத்தில் வசிக்கும் நபராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2023 இல் 35 வயதுக்கு மேற்படாதவாறு இருத்தல் வேண்டும். வேலைத்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ரூ.15000/-மாதம் வழங்கப்படும்.

விண்ணப்பத்திற்கான நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அளிப்பதற்கான கடைசி நாள்: 03.10.2023. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் நாகப்பட்டினம் அலுவலகத்தில் அளித்திட வேண்டும்.

முகவரி: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலக கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கும் விண்ணப்பத்தை அனுப்பலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

செம.. இனிமே வரி கட்ட பஞ்சாயத்து ஆபிஸ் ஏறி இறங்க வேண்டாம்!

PM Kisan விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? இதை பண்ணுங்க உடனே

English Summary: 50 percent subsidy for domestic fishermen to buy fishing nets Published on: 26 September 2023, 06:22 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.