அலங்கார மீன்வளர்ப்பு அலகு அமைக்க 60 சதவீத மானியம்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
PMMSY Scheme: 60 percent subsidy to set up an ornamental fish farming unit!

பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன் கீழ், பல்வேறு மீன் வளர்ப்பு திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆதி திராவிட மற்றும் பழங்குடியின சமூகத்தினர் அலங்கார மீன் வளர்ப்புக்கு ரூ.1.80 லட்சம் வரை 60% மானியம் பெறலாம். மீன் குஞ்சு பொரிக்கும் அலகுகள் ரூ.4.20 லட்சம் அல்லது ரூ.6.60 லட்சம் வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ள நபர்கள் மேலும் தகவலுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.

பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2021-22 ஆம் ஆண்டிற்கான திட்டங்களின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புறக்கடையில் சிறிய அளிவிலான அலங்கார மீன்வளர்ப்பு அலகு அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.1.80 லட்சமும் வழங்கப்படும்.

பிரதான் மந்திரி மீன் வளமேம்பாட்டுத் திட்டம் 2021-22 ஆம் ஆண்டிற்கான திட்டங்களின் கீழ் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் புதிய மீன்குஞ்சு வளர்ப்பு அலகு அமைக்க 60 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.4.20 லட்சம் மானியமும், புதிய மீன் வளர்ப்பு அலகு அமைத்து உள்ளீட்டு செலவினம் வழங்க 60 சதவீத மானியமாக அதிக பட்சம் ரூ.6.60 இலட்சம் மானியமும் வழங்கப்படும்.

மேற்காணும் மீன்வளர்ப்பு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விவசாயிகள் மீன் வளர்ப்பு செய்து பயன் பெறலாம். எனவே, விருப்பமுள்ளவர்கள் உடன் நல்ல தங்காள் ஓடை அணை, கோனேரிப்பட்டி, தாராபுரத்தில் இயங்கி வரும் மீன்வள ஆய்வாளர்கள் (தொலைபேசி எண். 89037 46476 அலுவலத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.)

மேலும் படிக்க: SSC வேலை அறிவிப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி போன்ற தகவல் இதோ!

மேலும், விவரங்களுக்கு ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்: 7ஆம் தளம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூடுதல் கட்டட வளாகம், பெருந்துறை ரோடு, ஈரோடு 638 011 தொலைபேசி எண்: 0424 2221912-ஐ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதே நேரம், விருதுநகர் மாவட்டத்தில், இதே திட்டத்தின் கீழ் புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தில் திட்டத்தில் (Construction Of New Grow Out Pond) ஆதிதிராவிடர் பிரிவில் 2.0 ஹெக்டேர் அலகு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் பிரிவு பயனாளிகளுக்கு 1ஹெக்டேர் அலகிற்கு ஆகும் செலவிணத்தொகை ரூ.7,00,000/-ல் 60 மானியமாக ரூ.4,20,000/- வழங்கப்படும்.

கொல்லைப்புற/புறக்கடை அலங்கார மீன்கள் வள்ர்த்தெடுத்தல் திட்டம் (Backyard Ornamental Fish Rearing Unit) பொதுப்பிரிவில் 1 அலகுக்கு பயனாளி தேர்வு செய்யப்பட வேண்டும். பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 1- அலகிற்கு ஆகும் செலவினத் தொகை ரூ.3,00,000/-ல் 40% மானியமாக ரூ.1,20,000 வழங்கப்படும்.

நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் (Medium Scale Ornamental Fish Rearing Unit) பொதுப்பிரிவில் 1 அலகு மற்றும் மகளிர் பிரிவில் 1 அலகு ஆக மொத்தம் 2 அலகுகளுக்கு பயளாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பொதுப்பிரிவு பயாளிகளுக்கு 1 அலகிற்கு ஆகும் செலவினத் தொகை ரூ.8,00,000/-ல் 40% மானியமாக ரூ.3,20,000/- மற்றும் மகளிர் பிரிவு பயனாளிகளுக்கு (Women) 60% மானியமாக ரூ.4,80,000/- வழங்கப்படும்.

மேலும் படிக்க:

வேளாண் இயந்திரங்கள்: 50 சதவீத மானிய விலையில் வாடகைக்கு பெறலாம்

SSC வேலை அறிவிப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி போன்ற தகவல் இதோ!

English Summary: PMMSY Scheme: 60 percent subsidy to set up an ornamental fish farming unit! Published on: 07 July 2023, 11:22 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.