1. வாழ்வும் நலமும்

வாழை இலையில் ஒரு அல்வா ரெசிபி! எளியமுறையில் வீட்டில் செய்வது எப்படி?

Yuvanesh Sathappan
Yuvanesh Sathappan
An Alva Recipe in Banana Leaf! How to make it easily at home?

வாழை இலையில் உள்ள நற்குணங்களுடன் ஒரு சுவையான ஆல்வா ரெசிபி, இப்பகுதியில் வாழை இலை அல்வா செய்வது எப்படி என்பதை விரிவாக காணலாம்.

தேவையான பொருட்கள்:

வாழை இலை - 2

சோள மாவு - ¼ கப்

சர்க்கரை - ¼ கப்

நெய் - 6 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 12

கிஸ்மிஸ் -10 (விருப்பப்பட்டால்)

பூசணி விதை - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்

செய்முறை:

இரண்டு நடுத்தரமான வாழை இலைகளை நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். பின்னர் அந்த இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் முந்திரி மற்றும் பூசணி விதைகளை தனித்தனியாகப் போட்டு, நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

சோள மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்துக்கொள்ளவும்.

வாழை இலை விழுது நன்கு வதங்கி இருகியதும், அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும்.

பின்னர் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறவும். இப்போது அதில் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறி, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.

இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, பூசணி விதையை மேலே தூவி அலங்கரிக்கவும்.

தற்போது சுவையான வாழை இலை நறுமணத்துடன் வாழை இலை அல்வா ரெடி!

மேலும் படிக்க

PM Vishwakarma Scheme: 18 பாரம்பரிய தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன்!

English Summary: An Alva Recipe in Banana Leaf! How to make it easily at home? Published on: 17 August 2023, 04:23 IST

Like this article?

Hey! I am Yuvanesh Sathappan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.