1. வாழ்வும் நலமும்

நீங்கள் கடைகளில் வாங்கும் கருப்பட்டி உண்மையானதுதானா? எளிதில் அடையாளம் காண்பது எப்படி?

KJ Staff
KJ Staff
aggery is loaded with antioxidants and minerals

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரிலிருந்து  தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி வெல்லம். இதனை பனை வெல்லம் என்றும் அழைப்பர். பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரினை காய்ச்சுவது மூலம் இந்த வெல்லம் கிடைக்கிறது. இந்த கருப்பட்டி வெல்லத்தினை  சிறியவர் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம், நமது உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.

போலி கருப்பட்டி கண்டுப்பிடிப்பது எப்படி?

ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளிலும் பனைமரங்கள் இருந்தது. ஆனால், தற்போது பனைமரத்தின் அளவு கால்வாசியாகக் குறைந்துவிட்டது. அதே சமயம் வருடத்தில் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 6 மாதம் மட்டுமே பதனீர் கிடைக்கும். இதில் தை, மாசி பதனீர் உற்பத்தி தொடங்கும் மாதங்கள். பங்குனி, சித்திரை உற்பத்தி உச்சத்திலிருக்கும். வைகாசி, ஆனி உற்பத்தி முடியும் மாதங்கள். ஆனால், கருப்பட்டி, பனங்கற்கண்டு, சில்லுக் கருப்பட்டிகளின் தேவை வருடம் முழுக்க இருந்துக்கிட்டே இருக்கு. தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துலயும், வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கத்துலயும் கடந்த 10 வருசமா கருப்பட்டி தொழிலில் போலிகள் அதிகம் உருவாகிவிட்டது. இந்த நிலையில் போலி கருப்பட்டி எது என்பதை எளிதில் அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்!.

  1. கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி.
  2. முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.
  3. கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது ஒரிஜினல்.
  4. நாள்பட்ட கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.
  5. ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டிதுண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.
  6. தேங்காயைத் தட்டிப்பார்ப்பது போல, கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி.
  7. கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப்பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலி.
Use Jaggery powder

மருத்துவ குணங்கள் நிறைந்த கருப்பட்டி

  • கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.
  • சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து  சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.
  • குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
  • கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.
  • பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு  வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
  • குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.
  • சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
  • காபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இதனை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.

M.Nivetha
nnivi316@gmail.com

English Summary: Do You know the Origin And Cultivation of Jaggery? how to find out original? Published on: 11 February 2020, 04:24 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.