1. வாழ்வும் நலமும்

சர்க்கரைக் கொல்லி என்னும் இன்சுலின் செடி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Gymneme sylvestre

தமிழகத்தில் வேலிகள், முட்புதர்க் காடுகள், காடுகளில் பரவலாக வளர்கின்ற இந்த தாவரம் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. பன்னெடுங்காலமாக தமிழ் மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் பயன் படுத்தப்பட்ட இந்த தாவரத்தின் நுனி முதல் வேர் வரை பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தோற்றம் மற்றும் சிறப்பு (Appearance and special)

சிறு குறிஞ்சான் இலை வேலிகளில் கொடியாக படரும் தன்மை கொண்டது. இதன் இலைகள் சிறிதாகவும், அதன் முனைகள் சற்று கூர்மையாகவும், மிளகாயிலை போன்ற தோற்றத்தில் காணப்படும். கசப்புச் சுவை அதிகமிருப்பதால் இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என அழைப்பதுண்டு. நீரிழிவு நோயினை தடுக்கம் முக்கிய மூலக்கூறுகள் இதில் இருப்பதால் இந்தியாவில் நெடுங்காலமாக உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது.

விஷக்கடி மூலம் உடலில் பரவும் விஷத்தன்மை,  எடை குறைப்பு, சளி, சரும நோய்கள் என அனைத்திற்கும் எதிராக சிறந்த மருந்தாக செயல் படுகிறது. நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை தொடர்ந்து உண்டால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது.

Herbal powder

சிறுகுறிஞ்சானின் மருத்துவ பயன்கள்

  • நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்கள் கட்டுப்பட சிறுகுறிஞ்சான் இலைகளுடன் சம அளவு நாவற்கொட்டைகளை தனித்தனியாக நிழலில் உலர்த்தி  இடித்து தூளாக்கி அதனை சலித்து காற்று புகா டப்பாக்களில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி தூளை வாயிலிட்டு வெந்நீர் குடித்துவர விரைவில் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  • சுவாச காசம் அதாவது மூச்சு திணறல் மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறுகுறிஞ்சானின் வேர் சிறந்த மருந்தாகும். இத்துடன் ஒரு சிட்டிகை, சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் வேர் இவற்றை தூளாக்கி ஒரு தேக்கரண்டி பொடியுடன் வெந்நீர் சேர்த்து குடித்து வர விரைவில் குணமாகும்.
  • உடலில் தோன்றும் வாயு பிரச்சனை, அஜீரணம் போன்ற காரணங்களினால் வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து குடலின் உட்புறச் சுவர்களைப் பாதிக்கிறது. மேலும் மது, புகை போன்றவற்றாலும் குடல் பாதிக்கப்படும். இதற்கு குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் விரைவில் விரைவில் குணமாவதுடன் வயிற்றில் இருக்கும் கிருமிகள் மடியும்.
  • பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தால் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டி, அதன் இலைகளை கஷாயம் செய்து சாப்பிட்டால் விரைவில் விஷம் முறியும்.
  • ஒவ்வாமையால் (Allergy) பாதிக்கப்பட்டவர்கள் சிறுகுறிஞ்சான் வேரைக் தூள் செய்து அடிக்கடி சாப்பிட்டு வர வாந்தி ஏற்பட்டு விஷம் வெளியாகும்.
English Summary: Do you know the “sugar destroyer”? Amazing health benefits of sirukurinjan (Gymneme sylvestre) Published on: 17 December 2019, 04:36 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.