1. வாழ்வும் நலமும்

இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் மத்திமீன்

KJ Staff
KJ Staff
  • சிக்கன், மட்டன் உணவுகளை விட மீன் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
  • மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம்.
  • இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.
  • மத்தி மீனில் புரதச்சத்து, கொழுப்பு சத்து, நீர்ச்சத்து ஆகியவை உள்ளன.
  • மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
  • மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.
  • மத்தி மீனில் விட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது.
  • மத்தி மீனில் விட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
  • மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்து கழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனின் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது.
  • இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
English Summary: Health benefits of Mathi Fish Published on: 03 January 2019, 12:50 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.