1. வாழ்வும் நலமும்

பல்வேறு சத்துக்கள் அடங்கிய காளான்

KJ Staff
KJ Staff

ரத்த சோகை

 ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவு காளானாகும். காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது. இதில் நிறைதிருக்கும் இரும்புச்சத்துகளை நமது உடல் விரைவாக ஏற்றுக்கொள்வதால் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை குறைபாடு நீங்கி உடல் பலம் பெற தொடங்கும்.

கொலஸ்ட்ரால்

 கொலஸ்ட்ரால் கொழுப்பின் ஒரு வடிவமாகும். பக்கவாதம், இதய நோய்கள் போன்றவற்றை தடுப்பதற்கு உடலில் சரியான அளவில் கொலஸ்ட்ரால் இருக்க வேண்டியது அவசியமாகும். காளான் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல், கொலஸ்ட்ராலின் அளவை சரியான விகிதத்தில் பராமரித்து உடலுக்கு நன்மையை செய்கிறது. 

நீரிழிவு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாக காளான் இருக்கிறது. இதில் குறைந்த அளவே கார்போஹைட்ரட் சத்து இருப்பதால் உங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியான விகிதத்தில் ரத்தத்தில் தினமும் ஒரு முறை சிறிதளவு காளான் உணவை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பலத்தை அளிக்கும்.

நோய் எதிர்ப்பு

எர்கோத்தியோனின் எனப்படும் மூலப்பொருள் காளானில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை மேம்படுத்துகிறது. ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.

புற்று நோய்

காளான் புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்த போது சிறந்த பலன் தந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக மார்பக புற்று, பிராஸ்ட்ரேட் அதிலும் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், காளானை சாப்பிட்டு வந்த போது அதிலிருக்கும் புற்று செல்களை அளிக்கும் ரசாயனங்கள் மேற்கூறிய புற்று நோயாளிகளின் நோய் பரவும் தன்மையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றுகிறது.

செலினியம்

காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது.

mushroom

இரும்பு மற்றும் செம்பு சத்து

உடலிலில் ஓடும் ரத்தத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம் ஆகும். இந்த இரும்புச்சத்து உடலுக்கு வலுசேர்த்து காயங்களிலிருந்து உடலை வேகமாக ஆற்றும் வலுசேர்த்து திறம்பட செய்கிறது. செம்பு சத்து ஈரலின் பணிகளை திறம்பட செய்ய ஊக்குவிக்கிறது. காளான் இந்த இரண்டு சத்துக்களையும் அதிகம் கொண்டது. 

ரத்த அழுத்தம்

 உணவாக உண்ணப்படும் காளான்களில் பலவகைகள் உள்ளன. அனைத்து காளானிலும் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. பொட்டாசியம் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் இருக்கும் இறுக்கத்தை மற்றும் ரத்த அழுத்தம் உயராமல் தடுக்கிறது. வாரமொரு முறை காளான் உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்த பிரச்சனைகள் குறையும்.

 உடல் எடை

உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், கொழுப்பு இல்லாத நார்ச்சத்து நிறைந்த காளான் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.

 வைட்டமின் டி

 காய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.

English Summary: Health benefits of Mushroom

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.