Krishi Jagran Tamil
Menu Close Menu

கண்களில் கருவளையம் சூழ்ந்துள்ளதா? அப்படி என்றால் அதற்கான எளிய தீர்வு

Tuesday, 09 July 2019 03:43 PM
dark circles

பெண்களும் சரி ஆண்களும் சரி தங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் இந்த கண் கருமையானது முகத்தை சோர்வுடன் ஒரு நோயாளி போல் காண்பிக்கிறது. பார்ப்பவர்கள் அனைவரும் நோயாளி என்றே முடிவு செய்து விடுகின்றனர்.

இதற்கான காரணங்கள்

கண்களுக்கான ஓய்வு தூக்கம். சரியான நேரத்திற்கு தூங்காமல் விழித்து கொண்டு இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டு கண் கருவளையம் உண்டாகும்.  

ஓய்வின்றி அதிக நேரம் வேலை பார்ப்பதால் கருமை உண்டாக்கும். உடலுக்கு ஓய்வானது மிக அவசியம். அந்த ஓய்வு சரியாக கிடைக்க வில்லை என்றால் கருவளையம் சூழ்ந்துவிடும்,

அதிக நேரம் கணினி, மடிக்கணினி, கைபேசி பயன் படுத்துவதால் கண்களில் அதிக தாக்கம்  ஏற்பட்டு கண்கள்  சோர்விழந்து பெரிதளவில் பாதிப்படையும்.  

சிலருக்கு சாதாரணமாகவே கண்களை தேய்க்கும் பழக்கம் இருக்கும். கண்களின் கீழ் பகுதி மிக மென்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை அடிக்கடி தேய்த்துக்கொண்டே இருந்தால் கருவளையம் உண்டாகும்.

அதிக நேரம் வெயிலில் அலைந்தாலும், வெயிலில் நின்று கொண்டிருந்தாலும் கண் கருமை உண்டாகும்.

அதிகம் சிந்திப்பது, பதட்டப்படுவது, மன அழுத்தம் போன்றவற்றாலும்  கருவளையம் உண்டாகும்.

eye dark circle

இவை அனைத்திற்கும் சிறந்த எளிய தீர்வு

தினமும் ஓய்வு நேரத்தில் அல்லது தூங்குவதற்கு முன்பு இரண்டு சிறிய அளவில் காட்டன் (cotton) கண்களின் தேவைக்கேற்ப எடுத்து அதில் சிறிது பன்னீர் நனைத்து கண்களில் வைத்து வந்தால் விரைவில் தீர்வு காண்பீர்கள். மேலும் பன்னீர் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தி நல்ல ஓய்வளிக்கும்.

உருளைக்கிழங்கின் சாறை அதே போல் காட்டனில் சிறிது  நனைத்து கண்களின் மேல் வைக்க விடும். முடிந்தால் இத்துடன் பன்னீரும் சேர்த்து வைக்கலாம்.

இவ்விரண்டு முறைகளையும் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் கண் கருவளையம் நீங்கி முகத்தில் பொலிவு கூடும்.

https://tamil.krishijagran.com/health-lifestyle/want-to-avoid-anemia-from-your-body-here-are-some-easy-tips-to-increase-blood-cells/

K.Sakthipriya
Krishi Jagran 

dark circles remove simple tips natural rose water potato juice
English Summary: how to remove dark circles? here are some awesome and simple tips, try it now

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. சத்தான சமச்சீர் உணவிற்கு அவசியமான கீரைகளும் அதன் நன்மைகளும்!
  2. குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் காடை வளப்பு!
  3. பான் அட்டைத் தொலைந்துவிட்டதா? கவலைவேண்டாம்! ஆன்லைனில் மறுபிரதி எடுத்துக்கொள்ள வழிமுறைகள்!
  4. PMKSY: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விருப்பமா? 100% மானியம் தருகிறது மத்திய அரசு!
  5. கொட்டித்தீர்க்கும் கனமழை - நீலகிரி, கோவை, தேனி, மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட்!
  6. RBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  7. இந்திய குடிமைப்பணி தேர்வு- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை!
  8. PM-Kisan திட்டம் : உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லையா? - விபரங்கள் இதோ!!
  9. மழையால் பீன்ஸ் செடியில் மஞ்சள் கருகல் நோய்- கட்டுப்படுத்த எளிய வழிகள்!
  10. வங்கக்கடலில் மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வானிலை மையம் தகவல்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.