1. வாழ்வும் நலமும்

வைட்டமின் இ- ன் முக்கியத்துவம்

KJ Staff
KJ Staff

வைட்டமின் இ

ஆன்டி ஆக்ஸிடன்ட்களில் மிக முக்கியமானது வைட்டமின் இ. இதனாலேயே, இந்தக் காலத்தில் வைட்டமின் இ மிகவும் பிரபலம் ஆகிவருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, சருமம் ஆரோக்கியமாக இருக்க என பல விஷயங்களுக்கு முக்கியமாக விளங்குகிறது வைட்டமின் இ. தாவர எண்ணெய்களில் இருந்து கிடைக்கும் ஆல்பா டோகோப்பெரால் (Alpha tocopherol), ‘செயல்படும் வைட்டமின் இ’  என்று அழைக்கப்படுகிறது.

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இருந்து வைட்டமின் இ கிடைக்கிறது. கொழுப்பில் கரையக்கூடியது என்பதால், தேவைக்கு அதிகமானவை சேமித்துவைக்கப்படும்.

வைட்டமின் இ-யின் தேவை

வைட்டமின் இ, செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. நம் உடலில் செல்கள் ஜோடி ஜோடியாக இருக்கும், ஏதாவது ஒரு காரணியால் பாதிக்கப்பட்டு, செல்கள் உடையும்போது, அவை தனித்துவிடப்படும். இப்படித் தனித்துவிடப்படும் செல்களை வைட்டமின் இ கட்டுப்படுத்தும். இதனால், புற்றுநோய் செல்கள் வளருவதற்கான வாய்ப்பு குறைகிறது. இந்த செயல்பாட்டுக்காகவே, வைட்டமின் இ-யை சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்டாகக் குறிப்பிடுகின்றனர்.

பயன்கள்

தசைகளின் ஆரோக்கியத்துக்கும் செயல்பாட்டுக்கும் வைட்டமின் இ அவசியம்.  குறிப்பாக, இதயத் தசைகளின் ஆரோக்கியமான இயக்கத்துக்கு வைட்டமின் இ முக்கியப் பங்காற்றுகிறது. எலும்பு மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படத் துணைபுரிகிறது.

வைட்டமின் ஏ, கே, இரும்புச்சத்து, செலினியம் போன்றவை உடலில் சீராக சேமித்துவைக்க வைட்டமின் இ மறைமுகமாக உதவுகிறது.

ரத்த செல்கள் உருவாவதில் வைட்டமின் இ-க்கும் பங்கு இருக்கிறது.

பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுப்பதில் பங்காற்றுகிறது.

சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் இருக்க, வைட்டமின் இ துணைபுரிகிறது.

தேவையின் அளவு

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 8-10 மி. கி வைட்டமின் இ தேவை. பொதுவாகவே, இந்தியர்கள் உணவில் அதிக அளவில் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். அதனால், இந்தியாவில் வைட்டமின் இ குறைபாடு கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

வைட்டமின் இ குறைபாடு

வைட்டமின் இ குறையும்போது, உடலில் தாது உப்புகள் கிரகிக்கப்படுவது பாதிக்கப்படும். கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் இ குறைவாக இருந்தால், குறைப்பிரசவம் ஏற்படலாம் அல்லது எடை குறைவான குழந்தை பிறக்கலாம். கர்ப்பிணிக்கு வைட்டமின் இ குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டால், மாத்திரை/மருந்து வடிவத்தில் வைட்டமின் இ எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படும்.

மேலும், வைட்டமின் இ குறைபாட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் சோர்வு, உடல் பலவீனம், கவனக்குறைவு போன்றவை ஏற்படும். ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படும். அரிய மரபியல் வியாதியான அபிட்டலிபோபுரோட்டினிமியா (Abetalipoproteinemia) இருப்பவர்களுக்கு, வைட்டமின் இ கிரகிக்கப்படும் திறன் மிகமிகக் குறைவாக இருக்கும்.

வைட்டமின் இ அதிகமானால் வரும் பாதிப்புகள்

தசைகள் வலுவிழக்கும்

பார்வைத்திறன் குறையும்

குடல் பகுதியில் பிரச்னை ஏற்படும்

கொழுப்பில் கரையக்கூடிய ஏ, டி, கே வைட்டமின்கள் கிரகிப்பதில் சிக்கல் ஏற்படும்.

 

English Summary: Importance of Vitamin E Published on: 27 December 2018, 05:17 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.