Krishi Jagran Tamil
Menu Close Menu

யோகாவின் முக்கியத்துவம் மற்றும் யோகா செய்வதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்

Monday, 10 June 2019 06:10 PM

யோகா என்பது உடலையும், மனதையும்,  புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். யோகா எனும் பயிற்சி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் இன்று யோகா செய்வதை வழக்கமாகி உள்ளனர்.

நம்மில் பலரும் இன்று யோகாவுடன் நாட்களை தொடங்குகின்றனர். பெரும்பாலான இடங்களில் குறிப்பாக பூங்காவில் அனைவரும் இணைத்து யோகா செய்வதை வழக்கமாக்கி உள்ளனர். மக்களிடம் யோகா பற்றியும், உடற்பயிற்சி பற்றியும் அதிக விழிப்புணர்வு உள்ளது.

ஜூன் 21 ஆம் தேதி யோகா தினமாக உலகமுழுவதும் கொண்டாட பட்டு வருகிறது. இந்த சமயத்தில் நாம் யோகா பற்றி மேலும் தெரிந்து கொள்ளல் அவசியமாகும்.

யோகாவின் பலன்கள்

யோகா செய்வதினால் எண்ணிலடங்கா நன்மைகள் உண்டாகும். 5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை நம் முன்னோர்கள் பயிற்சி செய்து பல அற்புத பலன்களை பெற்றுள்ளனர். யோகா என்பது ஒரு குறிப்பிட்ட மதம் சார்த்த கோட்பாடு அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும். முழுவதும் உடற்பயிற்சி, மனபயிற்சி, மூச்சுபயிற்சி போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியது.

யோகா பயிற்சி செய்வதற்கு என்று பிரத்தியேகமாக ஏதும் தேவையில்லை. எந்த வயதிலும் பயிற்சியினை தொடங்கலாம். செய்வதற்கு ஆர்வம் மட்டுமே போதுமானது. அவரவர்களின் உடல் மற்றும் மன வலிமையினை பொறுத்து எளிய பயிற்சி முதல் கடுமையான பயிற்சி வரை செய்யலாம். யோகா பயிற்சி செய்யவில்லை என்றாலும் அது எந்த பக்க விளைவினையும் தராது.

முறையாக யோகா செய்வதினால் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப் போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. 

மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது , மேலும் தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மனஒருமைப்பாட்டை போன்றவை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

யோகா செய்வதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்

 • உடலின் இசைவு இணக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.
 • தசைகளின் நலத்தையும் வலிமையையும் பாதுகாக்கிறது.
 • சுவாசத்தை சீராக்கி உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.
 • தேவைற்ற கொழுப்பு சத்தை குறைக்கிறது.
 • இதயம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை சீர் படுத்துகிறது.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

யோகா செய்ய வேண்டுமெனில் உணவில் கட்டுப்பாடு அவசியமாகும். மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், பாஸ்ட்புட் உணவு  வகைகளை தவிர்க்க வேண்டும்.உணவு உண்டபின் ஆசனம் செய்யக்கூடாது.

யோகா செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை ஆகும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்வதினால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் அரைமணி நேரம் பயிற்சி அந்நாள் முழுவதற்கும் போதுமானது.

Anitha Jegadeesan

Krishi Jagran 

யோகா புத்துணர்ச்சி விழிப்புணர்வு ஜூன் 21 யோகா தினம் யோகாவின் பலன்கள் பழமையான கலை யோகா பயிற்சி சர்க்கரை நோய் மனநோய் தவிர்க்க வேண்டிய உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தி ரத்த ஓட்டம் அதிகாலை

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

 1. மண்பானை விற்பனை அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி
 2. மண் வளத்தை காக்க சணப்பை சாகுபடி: துறை வல்லுநர்கள் ஆலோசனை
 3. களப்பயிற்சியுடன் கூடிய இலவச வகுப்பு: கால்நடை மருத்துவ பல்கலை கழகம் அறிவுப்பு
 4. கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அழைப்பு
 5. வேளாண் அறிவியல் நிலையம் நடத்தும் ஒரு நாள் இலவசப் பயிற்சி
 6. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்
 7. இதயக்கோளாறுகளை சரி செய்ய உதவும் இயற்கை நிவாரணி: சிக்கு என்னும் `சீமை இலுப்பை'
 8. குறைந்து வரும் உற்பத்தி: இழப்பை தடுக்க தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை
 9. கோடை விற்பனையை கருத்தில் கொண்டு விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி
 10. சங்க காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ‘இடலை எண்ணெய்’ பற்றி தெரியுமா?

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.