Krishi Jagran Tamil
Menu Close Menu

சுவைக்காக மட்டுமல்ல இயற்கை வரமருளிய சிறந்த நாட்டு மருந்துகள்

Monday, 03 June 2019 04:53 PM
cardamom

ஏலக்காய்

வாசனைப் பொருட்களின் ராணியாக திகழ்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் ஏலக்காய்க்கு உண்டு. ஜீரண உறுப்புகளின் கோளாறுகளை போக்குவதற்கு, வாய்ப் புண், வாய் அல்சர், மன அழுத்தம் என பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு, நீர், மற்றும் கிருமிகளை வெளியேற்றும். சிறு நீரகப்பை, சிறுநீரகம், சிறுநீரகக் குழாய் ஆகியவற்றை சுத்தமாக்கும். ஏலக்காயை தொடர்ந்து உட்கொள்ளும்போது புற்று நோய் செல்கள் உடலில் உருவாவது தடுக்கப்படுகிறது. இதயத்தில் ரத்தம் உறையும் அபாயத்தை ஏலக்காய் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. விக்கல் நிற்காமல் தொடர்ந்துகொண்டிருந்தால், 2 ஏலக்காயை பொடி செய்து அதனுடன் புதினா இலைகளை சிறிது எடுத்து, நீரில் போட்டு, காய்ச்சி குடித்தால், விக்கல் நின்று விடும்.

garlic

இஞ்சி

ஜலதோஷத்தை நிவர்த்தி செய்ய கூடியது. தலைவலி, உடம்பு வலி, இதயநோய், குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, ஆகியவற்றிருக்கு சிறந்த இயற்க்கை உணவாக அமைகிறது. இஞ்சியில் உள்ள ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள், நரம்பு மண்டலத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். முக்கியமாக இஞ்சி ஜூஸைக் குடித்து வந்தால், மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளையின் ஆரோக்கியம் மேம்படும். இஞ்சியில் உள்ள நிவாரணிப் பொருட்கள், நாள்பட்ட மூட்டு வலிகளில் இருந்து விடுபட உதவும். 

turmeric

மஞ்சள்

தமிழர்களின் வாழ்விலும், உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் மஞ்சள் நீங்கா இடம் பெற்றுள்ளது. மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினியாகும் (Antiseptic). உடலில் வெட்டு காயங்கள், தீக்காயங்கள், மற்றும் புண்களில் மஞ்சள் சிறந்த மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது. மஞ்சள் கலந்த பால், காய்ச்சல் மற்றும் இரும்பலை போக்க உதவுகிறது.  முகப்பருக்கள்,  கொப்பளங்கள், இவைகளை போக்க மஞ்சள் சிறந்தது. ஆயுர்வேதா (Ayurveda), பாரம்பரிய சீன மருத்துவம் (Traditional chinese Medicine) எனப் பல மருத்துவ முறைகளில் மஞ்சள் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. 

மஞ்சளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் E, நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம் (காப்பர்), இரும்பு, கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் (ஜிங்க்) போன்ற ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், பல்வேறு வகைகளில் உடலுக்கு நன்மையளிக்கிறது. 

asafoetida (perunkayam)

பெருங்காயம் 

செரிமானத்திற்கு மிக சிறந்தது. இருமல், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற சுவாசக் கோளாறுகளின் சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் உள்ள ஆண்டிபயாடிக் பண்புகள் காரணமாக இது மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான  உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு பெருங்காயம் சிறந்த பலன் அளிக்கிறது. இரத்த சர்க்கரை அளவை குறைக்க, பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம். பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும். எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும். பெருங்காயம் மிகச்சிறந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு, உடம்பின் அணுக்களை பாதுகாக்கும்.

இலவங்கப்பட்டை

பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பட்டையில் உள்ள பி-ஆமிலாய்ட் பாலிபெப்டைட் ஆலிகோமர்ஸ் என்ற மூலப்பொருள் மூளையில் மறதி நோய்க்கு காரணமான பி-ஆமிலாய்ட் பிப்ரில்ஸ் என்ற பக்டீரியாவை தாக்கி அழிக்கிறது. பட்டை பூஞ்சை காளான், பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி நோய்களிலிருந்து நமைக் காப்பாற்றுகிறது. தலைப் பேனை விரட்டவும் பட்டை உதவுகிறது. பூச்சிக் கடிக்கு பட்டையை அரைத்துப் பூசலாம். இது சர்க்கரை செரிமானத்தில் உதவுவதால் நீரிழவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. உடல் சுறுசுறுப்பை அதிகரித்து இதய சுகாதாரத்தை மேம்படுத்துகிறது.

சீரகம்

உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் மிக முக்கியமானது. சீரகத்தின் ஆண்டிசெப்டிக் பண்புகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிப்பதன் மூலம் காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, குமட்டல் ஆகியவற்றை கட்டுப்படுத்த சீரகம் உதவுகிறது. சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். 

கருமிளகு

இரும்பல், சளி, தொண்டை கரகரப்பு, ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வு அளிக்கிறது. இது இயற்கையில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது, குடல் வாயு உருவாவதை தடுக்க உதவுகிறது. உடலிலிருந்து நச்சுகளை அகற்றும், வியர்வை மற்றும் சிறுநீரகத்தை மேம்படுத்துகிறது. ஒரு தேக்கரண்டி மிளகு பொடியுடன், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய்களில் இருந்து விடுபடலாம். 

பூண்டு

செரிமா பிரச்சனைகளுக்கு இயற்கையான மருந்தானது. தோல் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக அமைகிறது. ஆன்டிபாக்டீரியல் பண்புகள் கொண்ட பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது. பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது. நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். 

cloves

கிராம்பு

கிராம்பு நிறைய உடல் நல பிரச்சினைகளை சரி செய்கிறது. தலைவலி, வாயில் ஏற்படும் பிரச்சினைகள், புற்று நோய், டயாபெட்டீஸ், மைக்ரோபியல் தொற்று, சைனஸ், ப்ளூ மற்றும் சளி போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. இது மேலும் நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது. கல்லீரலை பாதுகாக்கிறது, எலும்பிற்கு வலிமை சேர்க்கிறது. இதன் ஆன்டி செப்டிக் தன்மையால் வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. இந்த கிராம்பை நீங்கள் டீ, ஜூஸ், ஸ்வீட், உணவு தயாரித்தல் மற்றும் கிராம்பு எண்ணெய்யாக பயன்படுகிறது.

 

k.sakthipriya
krishi jagran 

indian spices organic tumeric ginger cloves garlic

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

  1. கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை
  2. கல்லாற்றில் இன்னும் இரண்டு வாரங்களில் பலாப்பழம் விற்பனை ஆரம்பம்
  3. விவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி
  4. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமித்து பயன்பெறலாம்
  5. உற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்
  6. கொள்முதல் பணிகள் இரண்டு வாரத்திற்கு நிறுத்தம்: நுகர்பொருள் வாணிப கழகம் அறிவுப்பு
  7. 'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா?
  8. விவசாயிகளுக்கு நற்செய்தி :வேளாண் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தடை உத்தரவிலிருந்து விலக்கு
  9. அதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்
  10. இயற்கையளித்த அற்புத கொடை: மனித சமூகத்திற்கு வரமாய் கிடைத்த அதிசய மரம்

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.