1. வாழ்வும் நலமும்

இந்த உணவுகளை மறுபடியும் சூடுபடுத்தினால் விஷமாகும் - பகீர் தகவல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Reheating these foods is poisonous - Pakir Info!

எப்போதுமே அன்றைக்குத் தேவையான உணவை அப்போதே, நம் தேவைக்கு ஏற்ப சமைத்துச் சாப்பிடுவதுதான் என்றும் சிறந்தது. அதைவிட்டுவிட்டு, அதிகமாக சமைத்துவிட்டு, எஞ்சிய உணவை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கமும் உள்ளது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும். அவ்வாறு எந்தெந்த உணவுகளை சூடாக்கக்கூடும். ஏன் மறுபடியும் சூடாக்கக்கூடாது என்கிறக் கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதா? இதோ அதற்கான பதில்கள்.

பழைய சாதம்

பழைய சாதத்தை ஒருபோதும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. சமைக்காத அரிசியில் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை உணவில் விஷத்தன்மையை கலக்கும் இயல்புடையவை. மீண்டும் சுடவைக்கப்பட்டால் இந்த பாக்டீரியாக்கள்அவை பன்மடங்காகப் பெருகின்றன.

முட்டை

முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது. முட்டைகளில் புரத சத்து மிக அதிகமாக உள்ளது, இதனை மீண்டும் சூடுபடுத்தும் போது, விஷமாக மாறும். இது உங்கள் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

சிக்கன்

பழைய சிக்கன் உணவை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அதிக புரதச்சத்து இருப்பதால், சிக்கனை மீண்டும் சூடாக்குவது பலவகையில் நமக்கு செரிமானம் தொடர்பானச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது உறுதி.

கீரை

பழைய கீரையை ஒரு போதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது ஏனெனில் அதில் உள்ள நைட்ரேட் சிதைந்து, அதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

உருளைக் கிழங்கு உருளைக்கிழங்கு மிகவும் அதிகம் விரும்பி சாப்பிடும் காய்கறி எனலாம். அத்தகைய சூழ்நிலையில், உருளைக்கிழங்கு சேர்த்த பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டு சூடாக்குவதன் மூலம், அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடுவதோடு, இது செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. இவற்றை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்துவது, நமக்கு பலவித நோய்களைக் குறிப்பாக புற்றுநோய் வரை உண்டாக்கக்கூடும். மக்களே உஷார். 

மேலும் படிக்க...

கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!

வெள்ளரிக்காய் சாப்பிட்டால், இத்தனைப் பக்கவிளைவுகள்!

English Summary: Reheating these foods is poisonous - Pakir Info! Published on: 17 March 2022, 10:24 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.