1. வாழ்வும் நலமும்

சாப்பிடும்போது செய்ய வேண்டியவை

KJ Staff
KJ Staff
  • சாப்பிடும்போது சாப்பாட்டைத் தவிர வேறு சிந்தனைகள் வேண்டாம். உணவைப் பற்றிச் சிந்திப்பது உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும். செரிமானம் சீராகும்.
  • சாப்பாட்டுக்கு முன் சூப் அருந்துங்கள். அது உங்கள் வயிற்றை நிரப்பும். அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கும். 
  • சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக கிரீன் டீ அல்லது பால் சேர்க்காத டீ குடிப்பது உங்கள் வயிற்றை செரிமானத்துக்குத் தயார்ப்படுத்தும்.
  • சாப்பிடுவதற்கு முன்னரும் பின்னரும் நிறைய தண்ணீர் குடியுங்கள். இடையில் வேண்டாம்.
  • இரவில் செரிமானத்துக்கு எளிதான உணவுகளை மட்டுமே உண்ணுங்கள்.
  • உணவில் நிறைய புரதம் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள். அது சீக்கிரமே பசி உணர்வு எழுவதைத் தடுக்கும்.
  • மாவுச்சத்தும், மசாலாக்களும், எண்ணெயும் நிறைந்த உணவுகள் செரிமானத்தைக் கடினமாக்குவதுடன் தூக்கத்தையும் கெடுக்கும்.
  • சாப்பிட்ட உடனே தூங்கச் செல்ல வேண்டாம். தாமதமாகச் சாப்பிடுவதும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். நெஞ்செரிச்சலை உருவாக்கும்.
  • ஒவ்வொரு வேளையும் நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம் இடம்பெற வேண்டும். அவை மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
  • எப்போதும் சூடான உணவுகளையே சாப்பிடவும். உணவின் சூடு உங்கள் வயிற்றுத் தசைகளைத் தளர்த்தும்.
  • மூன்று வேளை வயிறுமுட்டச் சாப்பிடுவதற்கு பதில் ஆறு வேளை குறைந்த அளவில் சாப்பிடுவது உங்கள் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
  • சாப்பிடும்போது கவலைகளை ஓரங்கட்டிவிடுங்கள். கவலையாக இருக்கும்போது உங்களையும் அறியாமல் நீங்கள் அதிகம் சாப்பிடுவீர்கள்.

 

English Summary: To Do while Eating Published on: 25 October 2018, 05:28 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.