1. வாழ்வும் நலமும்

காய்கறிகளை அளவிற்கு அதிகமாக உட்கொண்டல் என்ன நடக்கும் என்று தெரியுமா?

KJ Staff
KJ Staff
Fresh Vegetables

பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் சைவ உணவு காய்கறிகள், பழங்கள் ஆகும். நவீன உலகில் உடல் எடையை கவனத்தில் கொண்டு அரிசி, கோதுமை போன்றவற்றை தவிர்த்து வெறும் காய்கறிகள், பழங்களை பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிடுகிறார்கள். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" ஆம், காய்கறிகளை அளவிற்கு மீறி எடுத்துக் கொண்டால் பக்க விளைவை ஏற்படுத்தும் என்பதே இப்பதிவின் நோக்கம்.

பயன்களும், பக்கவிளைவுகளும்

தேங்காய்

தென் இந்தியா சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று எனலாம். தாய்ப்பாலிற்கு அடுத்ததாக போற்றப்படுவது தேங்காய்ப்பால்.  இதில் ‘ஏ’, ‘பி’ வைட்டமின்கள் உண்டு, இது குடல் புண்ணை ஆற்றும். தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூலச் சூட்டை மாற்றும்.

இதய நோய், உடல் பருமன், செரிமான பிரச்சனை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தேங்காய் சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.

அவரைக்காய்

அவரைக்காயில் எண்ணற்ற புரதச்சத்துகளும்,  குறைவான கொழுப்பு சத்துக்களும், அதிக கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அவரைப் பிஞ்சை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும், உடல் சூட்டை தணிக்கும். இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

முற்றிய அவரைக்காயை உட்கொண்டால் உடலில் செரிமானம், அழற்சி போன்ற பிரச்சனைகளை உண்டாகும்.

சுரைக்காய்

உடல் சூட்டால் அவதி படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். உடலை உரமாக்கி, செரிமானத்தை தர   வல்லது.  பித்தம் அதிகரிக்கும் போது  உடல் பலவீனமடைந்து பல நோய்கள் உண்டாகும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.

அதிகம் எடுத்துக் கொண்டால் பித்த வாயுவை ஏற்படுத்தி,  அஜீரணத்தை உண்டாக்கும்.

Basket vegetables

கத்தரிக்காய்

நாட்டு காய்கறிகளில் கத்தரிக்காயிற்கு எப்போதும், முதலிடம் உண்டு. தோற்றத்திலும், நிறத்திலும்  மாறுபட்டாலும் சத்துகள் எல்லாம் ஒன்று தான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. இதை உணவில் சேர்த்து கொண்டால்  வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள்.

சரும பிரச்சனை , அழற்சி, சொறி சிரங்கு  போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் கத்தரிக்காய் அதிகம் சாப்பிட கூடாது.

கொத்தவரங்காய்

பரபரப்பான வாழ்க்கையில் இயங்கி கொண்டிருப்பவர்கள் பதற்றம், மனஅழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் அவதி படுவார்கள். கொத்தவரங்காயில் உள்ள சத்துகள் நரம்புகளை வலுப்படுத்தி உடல் நலம் மற்றும் மனோ நலம் காக்கப்படும்.

சூடான உடல் தேகத்தை கொண்டவர்களுக்கு இது ஏற்றது அல்ல.  எனவே இதைத் தொடர்ந்து உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும்.இது பத்தியத்திற்கு ஏற்ற உணவு அல்ல.

வெண்டைக்காய்

வெண்டைக்காய் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் நீரழிவு, அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டிப் போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும்.

வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

வாழைத்தண்டு

வாழைத்தண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. உடல் உஷ்ணத்தை தணிக்கும். இதை வாரத்திற்கு ஒரு முறையேனும் உட்கொள்வது அனைவருக்கும் நலம் பயக்கும்.

தொடர்ந்து உண்டால் உடலில் உள்ள தாது உப்புகள் பாதிப்படையும்.

புடலங்காய்

எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் போன்ற  திரிதோஷத்தைப் போக்கி,  உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: You must know this: What will happen if we eat too many vegetables? Does it remove essential nutrients?

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.