1. தோட்டக்கலை

கற்றாழை கிராமம்: இந்த கிராமத்தின் ஒவ்வொரு முற்றத்திலும் கற்றாழை வளர்கிறது

Aruljothe Alagar
Aruljothe Alagar

Aloe vera Village

ஜார்க்கண்டின் மண்ணில் பல பயிர்களை பயிரிடலாம். இங்கு விவசாயிகள் பழங்கள் மற்றும் பூக்களின் நறுமணத்தை பரப்பி, தன்னிறைவை நோக்கி நகர்கின்றனர்.

மாநிலத்தின் காலநிலை மற்றும் புவியியல் நிலை தோட்டக்கலை பயிர்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை இது காட்டுகிறது. இதனுடன், ஜார்கண்ட் மலைப்பகுதி என்பதால் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு அபரிமிதமான வளர்ச்சி மற்றும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்திற்கும் நடுவே, ஜார்க்கண்டில் ஒரு கிராமம் உள்ளது, அதற்கு கற்றாழை கிராமம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்றுவரை நீங்கள் கற்றாழையை பல வழிகளில் பயன்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் நீங்கள் கற்றாழை கிராமத்தைப் பற்றி கேள்விப்பட்டீருக்கவுமாட்டீர்கள். ஆனால் ஜார்க்கண்டில் ஆலோ வேரா கிராமம் உள்ளது. அது பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.

இதற்கு ஏன் கற்றாழை கிராமம் என்று பெயரிடப்பட்டது? (ஏன் இதனை அலோ வேரா கிராமம் என்று அழைக்கிறோம்?)

ராஞ்சியின் நகரி தொகுதியின் தியோரி கிராமத்தில், மக்கள் அதிக அளவில் கற்றாழை சாகுபடி செய்கிறார்கள், அதனால் கற்றாழை கிராமம் என்று பெயர் பெற்றது. இந்த கிராமத்தின் மக்கள் தங்கள் எல்லா வயல்களிலும் மற்றும் வீட்டின் முற்றத்திலும் கற்றாழை பயிரிட்டுள்ளனர். இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) -பிர்சா வேளாண் பல்கலைக்கழகம் (பிஏயு) பழங்குடி துணைத் திட்டத்தின் (டிஎஸ்பி) கீழ் இந்த கிராமத்தை கற்றாழை கிராமம் என்று டிசம்பர் 2018 இல் பெயரிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, பிர்சா வேளாண் பல்கலைக்கழகம் வயல்களை ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது, அதில் பெரும்பாலான கிராமவாசிகள் கற்றாழை சாகுபடியில் ஆர்வம் காட்டுவது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறப்பான விஷயம் என்னவென்றால், கிராமத்தின் பெண்கள் கற்றாழை சாகுபடி செய்கிறார்கள், அத்துடன் அதை ஒரு சிறந்த வருமானமாகவும் ஆதாரமாகவும் பயன்படுத்துகிறார்கள். கற்றாழை சாகுபடி பெண்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

கற்றாழை மதிப்பை அதிகரித்தது

கற்றாழை சாகுபடி மாநிலம் முழுவதும் கிராமத்தின் மதிப்பை அதிகரித்துள்ளது என்று கற்றாழை கிராமத்தின் பெண்கள் கூறுகின்றனர். பிர்சா வேளாண் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் கற்றாழை இங்கு வளர்க்கப்படுகிறது.

கற்றாழைக்கு அதிக தேவை உள்ளது

ஜார்க்கண்டில் கற்றாழைக்கு நல்ல மவுசு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பெண்கள் கற்றாழை கீற்றை கிலோ ரூ. 35 க்கு விற்பனை செய்கின்றனர். தோட்டங்களில் கூடுதல் செலவுகள் இல்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். ஒரு கற்றாழை செடி மற்றொரு செடியை உற்பத்தி செய்கிறது, இதில் முதலீடு தேவையில்லை.

மேலும் கிராம மக்களளும் கற்றாழை சாகுபடி செய்ய விரும்புகிறார்கள். இது வருமானத்தை அதிகரிக்கிறது மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கிறது. நாட்டின் பல மாநிலங்களின் விவசாயிகள் கற்றாழை சாகுபடியை நோக்கி திரும்புகின்றனர்.

மேலும் படிக்க...

விவசாயம்: 50 ஆயிரம் முதலீடு, ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கவும்

English Summary: Aloe vera Village: Aloe Vera grows in every yard of this village

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.