1. தோட்டக்கலை

நெற் பயிரில் களை கட்டுப்படுத்துவது மற்றும் நீக்குவதற்கான யுக்திகள்

KJ Staff
KJ Staff
Beautiful Paddy

களைகள் பொதுவாக நெல் வயல்களில் காணப்படும். நெற் கதிர்களுக்கு இடையில் வளரும் தன்மை கொண்டது.  களைச் செடிகள் அதற்கு தேவையான நீர் , ஊட்டச்சத்து , சூரிய ஒளி போன்றவற்றை நெல் வயல்களில் இருந்து பெற்று கொண்டு நெல் வளர்ச்சியினை பாதிக்கிறது. நடவு பயிர்களில் 34% இழப்பினை தருகிறது. நெற்பயிரின் மகசூல் இழப்பிற்கு  இது மிக முக்கிய காரணம் ஆகும்.

களையின் தன்மைகள்

 • களைச் செடிகள் என்பது பயன் தராத தாவரம். இவ்வகை செடிகள் நில,  நீர் வளங்களை பயன்படுத்தி  கொண்டு நெற்பயிரின் வளர்ச்சியினை தடுக்கிறது.  
 • நெல் வயல்களில் களைகள் அதிக எண்ணிக்கையில் காண படுகிறது.   
 • களைகள் ஓம்புயிரியாக செயல்பட்டு  நெற்கதிர்களுக்கு பூச்சிகள் மற்றும் நோய்கள் ஏற்பட காரணமாயிருக்கிறது.
 • நிலமதிப்பை குறைத்து, மகசூல் மற்றும் தரம்  குறைக்கிறது.
 • களைகளால் குறையும் மகசூலின் அளவு
 • களைகளால் சேற்றுவயல் நெல்லில் மகசூல் குறைவு  -10-15 சதவிகிதம்
 • களைகளால் மேட்டுப்பாங்கான நிலத்தில் நேரடி விதைப்பு நெல்லில் மகசூல் குறைவு -35-45 சதவிகிதம்.
 • களைகளால் சேற்றுவயல் நேரடி விதைப்பு நெல்லில் மகசூல் குறைவு- 20-25 சதவிகிதம்.
Weed In The Paddy Field

நெல் வகை களைகள்

நெல் வயல்களில் பலவகையான களை  செடிகள் வளருகின்றன. அவ்வகை களை செடிகளை இனங்களின் அடிப்படையில் 5 வகையாக பிரிக்கலாம். அவை 

புல் வகை  களைகள்

 • கோரை வகை களைகள்
 • அகன்ற இலை களைகள்
 • பெரணி வகை
 • பாசிகள்

புல் வகை  களைகள்

குதிரைவாலி புல்

காட்டு நெல்

டார்பிடோ புல்

ஹிலோ புல்

பெரிய நண்டு புல்

திப்ப ராகி

காக்கைகால் புல்

கோகன் புல்

பெர்முடா புல்

கொல்லி நெல்லி

பொல்லா

சொவ்வெரிப்புல்லு, நரிங்கா

ஹிப்போ புல்

கோரை வகை களைகள் 

பொதுவான கோரை இனம்
குடைக்கோரை இனம்
பூங்கோரை
கைகீச்சி கோரை
ஊதா நிற கோரைப் புல்

அகன்ற இலை களைச்செடிகள்:

நீர் தாமரை
முயல் கதிலை
ஆராக் கீரை
முள் கீரை வகை
அப்பக் கீரை
கோழிப்பூ
காணாங் கோழை
பருப்பு கீரை, பசலை
சாரணை கீரை
நீர் கிராம்பு
நாகப்பொலா
நெல்லிச்சீரா

பெரணி வகைகள்

 • ஆப்ரிக்கன் நீர் பெரணி
 • நாலில்கொடியான்
 • அசோல

பாசி வகைகள்
சன்டி- சாரா சிற்றினம்
நீர் பாசி-ஸ்பைரோகைரா சிற்றினம்

Weed control

களை மேலாண்மை

களை மேலாண்மை என்பது நெல் வயல்களில் இன்றியமையாதது. இதை நேர்த்தியாக பயன்படுத்தினால் மட்டுமே அதிக மகசூல் பெற இயலும். பொதுவாக களை மேலாண்மையினை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

     களைக் கட்டுப்பாடு,  களை மேலாண்மை

களையினை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறுவது களைக் கட்டுப்பாடு ஆகும்.

களை மேலாண்மை என்பது களை வளர்ச்சியை தடுப்பது,  முழுவதுமாக களைகளை நீக்குவது, சீரான முறையில் கட்டுப்படுத்தல், களைகள் விதை உற்பத்தியை தடுத்தல் ஆகியனவாகும்.

களை வரமால் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை

 1. விதை நெல்லினை தேர்ந்தெடுக்கும் போது களைகள் தாக்காத இரகத்தை உபயோகிக்க வேண்டும்.
 2. விதை பாத்திகள் அமைக்கும் போது களைகள் தாக்காதவாறு உயர்த்தி அமைக்க வேண்டும்.  
 3. கருவிகள் மற்றும் இயந்திரத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 4. வரப்புகளில் அதிக நீர் தேங்காமல் சுத்தமான பாசன கால்வாய் மற்றும் வரப்புகள் அமைக்க வேண்டும்.  பாசி படர்வதை தடுக்க வேண்டும்.   
Using Pest Control

நெற்பயிரில் களை நிர்வாகம்

நெல் வயல்களில் தோன்றும் களைகளை மூன்று வகைகளில் கட்டுப்படுத்தலாம்.

உழவியல் முறை

இயந்திர முறை

களை கொல்லி முறை

உயிரியல் முறை

உழவியல் முறை

இயற்கையான முறையில் களைகளை நீக்குவது, தடுப்பது ஆகும். நெற் வையகத்தில் கால்நடைகளை மேய விட்டு களைகளை கட்டுப்படுத்தலாம், கோடை உழவு செய்வதன் மூலம் களைகள் வளர்ந்து பூத்து விதை உருவாகுவதை தடுக்கலாம்.

இயந்திர கலப்பையால் சேறு கலக்கும் போது வெளியவரும் கோரை கிழங்கை வெளியே எடுத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் கோரை புற்கள் வளருவதை கணிசமாக குறைக்கலாம்.      

தாழ்வான வயல்களில் நெல் பயிரின் களை மேலாண்மைக்கு வெள்ளப் பாசனம் மற்றும் தீவிர சேற்றுழவை மேற்கொள்ளலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட பயிர் வளர்ப்பு மேற்கொள்ளும் போது அதிகபடியான களைப்பயிர் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். நெல்-அசோலா மற்றும் நெல்-பசுந்தாள் உரம் சாகுபடி ஆகியன நல்ல பலன் தரும்.    

Weed control Machine

இயந்திர முறை

 நடவு நெல்லில் உள்ள களைகளை அகற்ற ஏக்கருக்கு சுமார் 12 முதல் 15 ஆட்கள் தேவைப்படுவார்கள். நேரடி விதை என்றால் இரு மடங்கு ஆட்கள் தேவை படுவார்கள். இயந்திரங்களை கொண்டு களை நிக்கும் போது குறைந்த ஆட்களே போதுமானது, இதனால் செலவும், நேரமும் சேமிக்க படுகிறது. நெல் நடவு செய்து 20 நாட்களில் களை இயந்திரம் பயன் படுத்தலாம்.

களை கொல்லி முறை     

களைக்கொல்லி முறை என்பது இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துவதே இரசாயன முறை களைக்கட்டுப்பாடு எனப்படுகிறது. களைக்கொல்லி இடுவதினால் களைகள் அழிவதுடன் அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தி நெல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பொதுவாக இரண்டு வகை களைக்கொல்லிகள் பயன் படுத்த படுகின்றன.

களைகள் முளைக்கும் முன் பயன்படுத்தும் களைக்கொல்லிகள்

களைகள் முளைத்தபின் அளிக்கும் களைக்கொல்லிகள்

Natural Weed Control

உயிரியல் முறை

உயிரியில் முறையில்  பூச்சிகள், நோய் உயிரி, தாவரவுண்ணி,  மீன்கள், நத்தைகள் அல்லது சமமாக போட்டியிடும் செடிகள் ஆகியவற்றை பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்துவதே ஆகும்.  

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Do You Know How To Control weed In Paddy Field: Here Are Organic And Non- Organic Techniques Published on: 08 July 2019, 06:00 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.