1. தோட்டக்கலை

பசுமையான சிதைக்கப்படாத பொருள்களை உரமாகப் பயன்படுத்துதல் பற்றி தெரியுமா?

KJ Staff
KJ Staff
Green manuring

மண்ணில் நிலை பெற்று விண்ணிலுள்ள சுமார் 75% தழைச்சத்தின் ஒரு பகுதியினை நுண்ணுயிர்கள் மூலம் ஈர்த்து முடிச்சுகளில் சேகரம் செய்து நமக்களிக்கும் பசுந்தாளுரப் பயிர்களான சணப்பு, தக்கைப் பூண்டு, அவுரி, கொளிஞ்சி போன்றவற்றின் பயன்பாடு அனைவரும் அறிந்ததே.

இரு பயிர்களின் இடைப்பட்ட காலம், மண்ணின் தன்மை, ஈரத்தன்மை இருப்பு, இவற்றை பொருத்தே இச்செயல்பாடு உள்ளது. அக்கம் பக்கத்திலுள்ளோர் இணைந்து செயல்படுத்தினால் பாதுகாவலுக்கும் ஓரிருமுறை நீர்பாசனத்துக்கும் உதவும். விதைகளை நெருக்கமாக விதைத்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

இவ்வாறு செய்தால் பின்னர், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை  குறித்து விளக்கப்படும் மண்ணில் கரிம சேகர, செயல்பாட்டுக்குத் தக்கவாறு ஏக்கருக்கு தழைச்சத்து 30 முதல் 60 கிலோ வரை சேகரம் மட்டுமன்றி நுண்ணூட்டச் சத்துக்களும் குறிப்பாக துத்தநாகம் போன்றவை பயிருக்குக் கிடைக்கலாம்.

green manuring benefits

இயல்பாகவே,வளரும் துளிர்ப்பகுதிகளில் வளர்ச்சிக்கான சிறு குறு அளவுகளில் அவசியம் தேவைப்படும் நுண்ணூட்டச் சத்துக்கள் குவிந்திருந்து வளர்ச்சியினை ஊக்குவிப்பதாக அறியப்பட்டுள்ளது. பல்வகைத் தாவரங்களின் துளிர்களிலும் உள்ள இத்தகைய நிலை, பசுந்தாளுரப் பயிர்களின் வளர் துளிர்களுக்கும் பொருந்தும். ஆகவே, பசுந்தாளுரப் பயிர்களிலிருந்து தழைகளால் நிலங்களுக்கு கிடைக்கும் சத்துக்களுடன் கூடுதலாக குறைந்த அளவிலேயே தேவைப்படும் நுண்ணூட்டங்களும் கிடைப்பது ஒரு சன்மானமே! இந்நிலையில் பசுந்தாளுரப் பயிர்களின் செய்லபாடு மிகவும் வேண்டற்பாலது.

தழைகள்

நெடுங்காலமாக வேலிகளிலும், காலியிடங்களிலும் நிலைத்திருந்த புங்கன், ஆவாரை, ஆடாதொடா, சவுண்டல், பொன்னாவரை, வாதநாராயணன், பூவரசு, எருக்கன் மற்றும் அண்மைக்கால அறிமுகமான கிளைரிசீடியா போன்ற செடிகளும் நஞ்சை நிலங்களுக்கு அளித்து வந்த தழைகளாகிய இயற்கையுரங்களுக்கு தட்டுப்பாடு தெரிகிறது. காலியிடங்களில் மரங்கள் இல்லை! வேலியும் இல்லை! அதில் பிறகு தழைகளேது? ஆகவே, இயன்ற இடங்களிலெல்லாம் தழையுரச் செடிகளையும், மரங்களையும், நடவேண்டிய ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்!

மேலும் தற்சமயம் தீவிரமாகப் பேசப்படும் சுற்றுப்புற சூழல் சீரமைப்பு செயல்பாட்டில், பொது இடங்களில், விவசாயிகள் ஒன்றிணைந்து தழை உரச் செடிகள் நட்டுப் பராமரிப்புச் செய்வது ஒரு பெரிய சவாலே! சவாலை ஏற்பது ஒரு ஏற்புடைய செயலே! எல்லா மரங்களையும் நட்டு, தழை பெற தாமதமாகுமாதலால், இப்போதைக்கு உரத்துக்காக கிளைரிசீடியாவினை பெருமளவில் பெருக்குவதே உத்தமமானது. பொதுவாக இதன் குச்சிகளை நட்டு தளிர்க்க வைப்பது சிரமமாகலாம். இதற்கொரு எளிய முறை ஏற்புடையது. இவை ஏற்கனவே வேலிகளில் உள்ள இடங்களை கவனியுங்கள். அவற்றில் ஒரு முறை வெட்டாது விட்டால் பொங்கலுக்குப் பின் கணிசமாக மலர்வது நம் பார்வையிலிருந்து தப்பாது. இவற்றை கவனித்து வந்தால் பங்குனி சித்திரையில் காய்கள் கனியும்போது வெடிப்பதற்கு முன் கவனமுடன் ஓரிரு நாட்களில் போதுமான அளவு பறித்துக்கொள்ளலாம்.

green manuring

அவை பழுதுள்ளதால் பறித்து இரண்டொரு நாட்களில் நிறைய விதைகள் சேகரிக்கலாம். சேகரித்து வைத்தால் ஓராண்டுக்குள் தேவைப்படும்போது சிறு பிளாஸ்டிக் உறைகளில் நாற்று விட்டால் அத்தனையும் முளைக்கும். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் உரியபடி நடலாம். இவ்வாறு நாற்று பெற தவறிவிட்டால், இத்தழைகளை வெட்டும்போது இளங்குஞ்சிகளை கூட பிளாஸ்டிக் பைகளில் போட்டால் நன்கு துளிர்க்கும். வேலிகளிலோ அல்லது இயன்ற இடங்களிலெல்லாம் நடலாம். தேவைப்படும் போது வெட்டுவதைவிட அவ்வப்போது வெட்டி, தழைகளை பெருமளவில் பெற்று கம்போஸ்ட்டாக்குதல், மூடாக்கு அமைத்தல் என பல்பயனெய்தலாம்.

இவ்வாறே செவ்வல் நிலங்களில் நிறைய காணப்படும் பொன்னாவரை செடிகளிலிருந்து விதைகள் சேகரம் செய்து பெருக்கி எங்கெல்லாம் வாய்புள்ளதோ உங்கள் நினைவில் கொள்ளவே  இவ்வாறு வலியுறுத்தப்படுகிறது.

தழைகள் தயாரிப்பில் ஈர்ப்பு ஏற்பட்டால் தயங்காது, அவரவருக்கு இயன்றபடி செயல்பட்டு, நிறைய தழைச்செடிகள் நட்டுப் பெருக்க வாய்ப்புள்ளதை உங்கள் நினைவில் கொள்ளவே இவ்வாறு வலியுறுத்தப்படுகிறது.

மேற்குறிப்பிட்டுள்ள தழையுரச் செடிகளை இயன்ற வரை நடுவதுடன், இயற்கையுரங்களாகிய சாணம், கோமியம், இணைந்த தொழு உரம், பயிர்கழிவு கம்போஸ்ட், மண்புழு உரம், பசுந்தழையுரமிடுதல் ஆகியவற்றின் மூலம் இயற்கையில் நிலம் செறிவூட்டப்படுவது

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: Do You know What is Green Manuring? Here are some simple idea's about green Manure uses and benefits Published on: 01 August 2019, 04:58 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.