Krishi Jagran Tamil
Menu Close Menu

இரசாயன கலவை இல்லாமல் எளிய வழியில் பூச்சிகளை விரட்ட வேண்டுமா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக

Wednesday, 03 July 2019 10:20 PM
Pest In Plants

இயற்கை வேளாண்மையில் ஒவ்வொரு உயிரினமும் எதோ ஒரு வகையில் தாவரங்களுக்கு நன்மை செய்து கொண்டு தான் இருக்கின்றன. விலங்குகளின் கழிவுகள் உரமாகவும் அதே சமயத்தில் மண் வளமாகவும் மாறுகிறது. சில நேரங்களில் சில பூச்சிகள் பயிர் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கின்றன.

பூச்சிகளை விரட்டுவதற்கு இயற்கை வேளாண்மை, நாமே தவரிக்க கூடிய சில இயற்கைக் கரைசல்களை பரிந்துரைக்கின்றன. பூச்சிகளைக் கொல்வது நமது நோக்கம் கிடையாது. அவற்றை விரட்டுவதே நோக்கம். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்டால் நம்மால் எந்த ஒரு சூழ்;நிலையிலும் நல்ல பூச்சி விரட்டியை தயார் செய்து கொள்ள முடியும்.

பூச்சி விரட்டி தயாரிக்க தேவையானவை

 நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய வழி. பின்வரும் இலை தழைகள் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டவை

 1. ஆடுதொடா, நொச்சி
 2. உடைத்தால் பால் வரும் எருக்கு, ஊமத்தை
 3. கசப்புச் சுவை மிக்க வேம்பு, சோற்றுக் கற்றாழை
 4. உவர்ப்பு சுவை மிக்க காட்டாமணக்கு
 5. கசப்பு உவர்ப்பு சுவை மிக்க வேப்பம் விதை

 இதன் இலைகளை அரைத்து சாறு அல்லது காய்ச்சி வடித்த நீரினை தாவரங்கள் மீது தெளிக்கும் போது பூச்சிகள் தொல்லை குறையும். 

Pest Control

பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை

 • சோற்றுக் கற்றாழை
 • பிரண்டை
 • எருக்கு
 • ஊமத்தை
 • நொச்சி
 • சீதா இலை
 • வேம்பு
 • புங்கம்
 • உண்ணிச் செடி
 • காட்டாமணக்கு
 • ஆடாதொடை

மேலே குறிப்பிட்ட செடிகளில் ஏதேனும் இலைகள் அல்லது எளிதில் கிடைக்க கூடிய இலைகளை தேர்தெடுத்து கொண்டால் போதும்.

7 முதல் 8 இலைகள் பூச்சி விரட்டி தயாரிக்க போதுமானது. ஒவ்வொன்றிலும் 1 கிலோ எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது நமக்கு  7 கிலோ  முதல் 8 கிலோ இலைகள் வரை கிடைத்து விடும்.  

காட்டாமணக்கு, வேம்ப முத்து இவற்றில் எதாவது ஒன்றை 100- 200 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இவற்றை கலந்து ஊறல் முறையில் பூச்சி விரட்டிகள் தயாரிக்கலாம்.

ஊறல் முறை

இந்த முறையில் இலைகளையும். விதைகளையும் 1 கிலோ வீதம் எடுத்து நன்கு இடித்து மூழ்கும் அளவிற்கு கோமியம் , 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முதல் 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கரைசலில் கலந்து கூழாக மாறிவிடும். இவற்றை 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்த பயிர்களில் அடிக்கலாம்.

பூச்சி விரட்டியின்  பயன்கள்

பொதுவாக புழுக்கள் மற்றும் பூச்சிகள் மணத்தைக் அடிப்படையாக கொண்டு தான் பயிர்களைக் கண்டறிகின்றன.இதனால் நாம் தயாரிக்கும்  பூச்சி விரட்டி ஒருவித ஓவ்வாமை மணத்தை ஏற்படுத்துவதால் பூச்சிகள் பயிர்களின் அருகில் வராது.

கால்நடைகளின்  சாணம், சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை தருவதால் பூச்சிகளும், புழுக்களும் விலகிச் செல்கின்றன. இதற்காக தான்  கால்நடைகளின் கழிவு மண்வளத்தை பாதுகாக்கும் இயற்கை உரமாக பயன்படுத்தினர்.

பூச்சி விரட்டியினால் பெரும்பாலானவை இறந்துவிடுகின்றன. இதனால் எண்ணிக்கைபெருமளவில் குறைந்து விடுகிறது. மடித்த பூச்சிகள் பறவைகளுக்கு உணவாகி விடுகின்றன.

இவ்வாறு செய்தல் உங்களையும், உங்கள் தாவரத்தையும் பூச்சிகளிடமிருந்து இயற்கையான முறையில் பாதுகாக்கலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

Pest Control Pest Management Organaic Pest Control Benefits of Organic Pest Control Preparation of Organic Pest Control Neem Leaf

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

 1. மண் வளத்தை காக்க சணப்பை சாகுபடி: துறை வல்லுநர்கள் ஆலோசனை
 2. களப்பயிற்சியுடன் கூடிய இலவச வகுப்பு: கால்நடை மருத்துவ பல்கலை கழகம் அறிவுப்பு
 3. கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அழைப்பு
 4. வேளாண் அறிவியல் நிலையம் நடத்தும் ஒரு நாள் இலவசப் பயிற்சி
 5. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்
 6. இதயக்கோளாறுகளை சரி செய்ய உதவும் இயற்கை நிவாரணி: சிக்கு என்னும் `சீமை இலுப்பை'
 7. குறைந்து வரும் உற்பத்தி: இழப்பை தடுக்க தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை
 8. கோடை விற்பனையை கருத்தில் கொண்டு விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி
 9. சங்க காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ‘இடலை எண்ணெய்’ பற்றி தெரியுமா?
 10. நீரை சிக்கனப்படுத்தி, இரட்டிப்பு லாபம் தரும் பயறு வகை விதைப்பண்ணை

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.