Krishi Jagran Tamil
Menu Close Menu

இயற்கை விவசாயத்தில் யூரியாவின் செயல்பாடும், பயன்பாடும் குறித்த அலசல்

Tuesday, 03 September 2019 05:31 PM
Usage Of Urea

பொதுவாக யூரியாவை நாம் செடிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறோம். அரசு யூரியாவிற்கு மானியமும் வழங்குகிறது. நிலங்களில் யூரியாவை பயன்படுத்துவதற்கு ஆதரவாக ஒரு சாராரும், எதிராக ஒரு சாராரும் இருந்து வருகின்றனர் எனலாம். அதே போன்று நிலங்களில் யூரியாவை பயன்படுத்தும் போது மிகுதியான அளவில் விரயமாகிறது. வேளாண் அறிஞர்கள் யூரியாவின் அளவை நிர்ணயித்த,  போதும் அதிக விளைச்சலுக்கு, மகசூலுக்கு விருப்பப்பட்டு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் பயன்படுத்துவதாக செய்திகள் வருகின்றன.

யூரியாவினை அதிக அளவில் பயன்படுத்தும் போது மண்ணின் உயிர் தன்மை மெல்ல மெல்ல குறைகிறது. இன்று அதிக அளவிலான விவசாகிகள் இயற்கை வேளாண்மை, ஜிரோ பட்ஜெட் விவசாயம் என பின்பற்ற தொடங்கியதால் யூரியாவின் பயன்பாட்டை குறைத்துள்ளனர்.  

காற்றிலேயே 78% நைட்ரஜன் (தழைசத்து) இருக்கையில், வெறும் 46% மட்டுமே தழைசத்து உள்ள யூரியாவினை எதிர்க்கின்றனர். காற்றில் கலந்துள்ள நைட்ரஜனை மண்ணில் பிடித்து வைத்து, செடிகளுக்கு அளிக்கும் நுண்ணுயிரிகளை பெருக வைத்தாலே போதுமனது. இயற்கை தந்த வரமான நாட்டு மாடுகளின் சாணம், மூத்திரம் கொண்டு செய்யபடும் இயற்கை உரங்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்றவை மண்னிற்கு தேவையான அனைத்து தழைசத்துகளையும் அளிக்கிறது.  ஜிரோ பட்ஜெட் விவசாயதின் அடிப்படை தத்துவமும் இதுதான்.

Neem Coated Urea

வேப்பம் புண்ணாக்கு அல்லது வேப்ப எண்ணெய் போன்றவற்றை மண்ணுக்கும் பயிர்களுக்கும் நேரடியாக அளிப்பதால் தழைசத்து வீணடிப்பு தடுக்கப்படுவதோடு, பூச்சி, பூன்ஜான் வேர் அழுகல் போன்ற பிரச்சனைகள் பெருமளவில் தடுக்கப்படும். அதே போன்று மண்ணுக்கு கிடைக்கும் நைட்ரஜனை ஆவியாகாமல் கட்டுபடுத்தவும் வேம்பு மிக சீரிய முறையில் செயல் படும்.

யூரியா பயன் பட்டை கட்டுப்படுத்த இயலாதவர்கள் இரண்டு பங்கு யூரியாவிற்கு, ஒரு பங்கு  வேம்பு கலந்து பயன்படுத்தினால் உங்கள் பணமும், மண்ணும், இயற்கையும் காக்கப்படும்.

இயற்கை வழியில் அதிக செலவு செய்யாமல் மண்ணையும் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் நம்மால் காக்க முடியும். அடுத்த தலை முறையை கருத்தில் கொண்டு மண்ணின் உயிரை மீட்போம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

organic sources of nitrogen Primary Source of Crop Improper Use of Urea Fertilizers Healthy Plant Organic farming Mixing Urea with Other Fertilizers Prevent unwanted chemical reactions Well-balanced fertilizer Zero Budget Farming
English Summary: Healthy Plant Growth Depends Upon Organic Sources of Nitrogen

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

KJ Tamil Helo App Campaign

Latest Stories

  1. வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்குமா? வேளாண் துறை விளக்கம்!!
  2. விவசாயத்தை பாதுகாக்க புதிய முயற்சி : தேனீ வளர்ப்பிற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு!
  3. தமிழக விவசாயிகள் வெளியே வர வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை!!
  4. கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்குத் தண்ணீர் திறப்பு : முதல்வர் உத்தரவு !!
  5. மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதை அடுத்து கடலுக்குச் செல்ல தயாராகும் தமிழக மீனவர்கள்
  6. படையெடுத்து வரும் பாலைவன வெட்டுக்கிளிகள்: இந்திய விவசாயிகளுக்கு மற்றொரு அச்சுறுத்தல்
  7. அடுத்த மாதம் முதல் தடைபட்ட கோமாரி தடுப்பூசி முகாம் நடக்க ஏற்பாடு
  8. புதிய திட்டத்தின் மூலம் பயன்பெற காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு
  9. பழ ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை
  10. வீடு, வாகன கடன்களுக்கான கடன் தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்!!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.