Krishi Jagran Tamil
Menu Close Menu

மலரியல் பயிர்: மணம் மிகுந்த ஜாதிமல்லி

Friday, 10 May 2019 04:13 PM

மண் : நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண் மற்றும் வண்டல் மண் ஏற்றது. களர், உவர் நிலங்கள் சாகுபடிக்க உகந்தவை அல்ல. போதிய அளவு வசதியும், சூரிய வெளிச்சமும் இதன் வளர்ச்சிக்கு முக்கியத் தேவையாகும்.

பருவம் : ஜுன்  - நவம்பர்

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது 30 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகள் எடுத்து ஒரு மாதம் ஆறவிடவேண்டும். ஒவ்வொரு குழிகளுக்கும் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம்இடவேண்டும்.

விதையும் விதைப்பும்

இனப்பெருக்கம் : வேர் பிடித்த பதியன்கள்

பதியன்களைத் தயார் செய்தல் : பென்சில் பருமனுள்ள நன்றாக முற்றிய தண்டுகளை ஒரு கத்தி கொண்டு தண்டின் ஒரு பகுதியில் இலேசாக மேல் பட்டையைச் சீவி நீக்கிய பின்னர் அத்தண்டின வளைத்து வெட்டிய பாகத்தினை மண்ணில் புதைக்கவேண்டும். பிறகு நீர் பாய்ச்சவேண்டும். சீவப்பட்ட பகுதியிலிருந்து  சல்லி வேர்கள் தோன்றும். மூன்று மாதங்கள் கழித்து பதியன்களை வேர்கள் சேதமடையாமல், மண்ணிலிருந்து எடுத்து, நடவிற்கப் பயன்படுத்தலாம். நுனிக்குச்சிகளைப் பதியன்களாகத் தயாரித்து பனி அறையில் நட்டு எளிதில் வேர் பிடிக்கச் செய்யலாம். வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும் இண்டோல் ப்யூரிட்டிக் அமிலம் 500 முதல் 1000 பிபிஎம் என்ற அளவில் பயன்படுத்தி வேர் பிடித்தலைத் துரிதப்படுத்தலாம். இம்முறையில் 45 நாட்களில் வேர்கள் தோன்றும்.

நடவு : வேர் வந்த பதியன்கள தாய்ச் செயிலிருந்து பறித்ததும் குழியின் மத்தியில் நடவேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில் நடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

செடி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரத்துடன 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை ஆண்டிற்கு இருமுறை இரண்டாகப் பிரித்து இடவேண்டும். டிசம்பர் மாதத்தில் கவாத்து செய்தபின் ஒருமுறையும் பின்பு ஜுன் - ஜுலை மாதங்களில் ஒரு முறையும் இடவேண்டும். உரமிடும்போது செடியிலிருந்து 30 செ.மீ தள்ளிவிட்டு நன்கு கொத்தி மண்ணுடன் கலக்கச் செய்யவேண்டும். பின்பு தேவையான அளவு நீர் பாய்ச்சவேண்டும்.

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிராம் செடி ஒன்றிற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிராம் செடி ஒன்றிற்கு)

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

ஜாதிமல்லி

60

120

120

470

30

கவாத்து செய்தல் : செடிகளை வருடம் ஒரு முறை அதாவது டிசம்பர் கடைசி வாரத்தில் கவாத்து செய்யவேண்டும். தரை மட்டத்திலிருந்த 45 செ.மீ உயரம் வரை வெட்டிவிடவேண்டும். செடிகளை குத்துச்செடிகளாக வளர்க்கவேண்டும். படரவிடக்கூடாது. செடிகள் நடவு  செய்து ஓராண்டு கழித்து முதல் முறையாக கவாத்து செய்யவேண்டும்.

 நீர் நிர்வாகம்

10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும்.

ஒருங்கிணைந்து பயிர் பாதுகாப்பு

மொட்டுப்புழு : மானோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

சிவப்பு சிலந்திப் பூச்சி : இவைகள் இலைகளின் அடிப்புறத்தில் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுவதால் பாதிக்கப்பட்ட இலைகள் பழுத்து வெண்மையான வரை பின்னயதுபோல் காணப்படும்.  இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 50 சதத்தூளை லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

இலை வண்டு : இவ்வண்டுகள் இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்பதில் இலைகள் மஞ்சள் நிறமாகிப் பின் பழுத்து உதிர்ந்து விடும். மழை வந்தபிறகு விளக்குப் பொறி வைத்து வளர்த்த வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

நோய்கள்

இலைப்புள்ளி நோய் : ஜாதிமல்லியை அதிகமாகத் தாக்கி சேதம் செய்வது இந்த இலைப்புள்ளி நோய் ஆகும். ஆரம்பத்தில் இலைகளில் சிறுசிறு கரும்புள்ளிகள் தோன்றி பிறகு இலை முழுவதும் பரவிவிடும். தாக்கப்பட்ட இலைகள் நெருப்பால் கருகியதுபோல் காட்சி அளிக்கும். இந்நோயினை கட்டுப்படுத்த மான்கோசெப் மருந்தினை லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

அறுவடை

செடிகள் நட்ட ஒரு வருடத்திலேயே பூக்க ஆரம்பித்து விடும். இருந்தாலும் இரண்டாம் வருடத்திலிருந்து தான் சீராக மகசூல் கொடுக்கும். மொக்குகள் விரிவதற்கு முன்னதாகவே காலை நேரங்களில் பறிக்கவேண்டும். வாசனை எண்ணெய் தயாரிப்பதற்கு மொக்குகள் மலர்ந்த பின்னர் காலை வேளைகளில் பறிக்கவேண்டும்.

மகசூல் : ஒரு எக்டருக்கு 11 டன் பூ மொக்குகளை விளைச்சலாகப் பெறலாம்.

 

 

jathimalli cultivation fragrance uses
English Summary: jathimalli : flower crops: cultivation

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!
  2. பிரதமரின் விவசாயிகள் ஓய்வுதியத் திட்டதில் சேர என்ன செய்ய வேண்டும்- வழிமுறைகள் உங்களுக்காக!
  3. நீலகிரியில் கொட்டப்போகிறது அதி கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!
  4. கோழியினங்களுக்கான பாரம்பரிய மூலிகை முதலுதவி மருத்துவம்!!
  5. மாட்டுச்சாணத்தைக் காசாக்க நீங்க ரெடியா? இதோ சில வழிமுறைகள்!
  6. மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகளும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!!
  7. பயிர் பாதுகாப்பு மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்களா? அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!!
  8. விளைபொருள் சேமிப்பு கிடங்கு அமைக்க விருப்பமா? கடன் வழங்குகிறது இந்தியன் வங்கி!
  9. மத்திய அரசின் மானியத் தகவல்கள் அனைத்தும் உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் "PM Kisan Mobile App"!!
  10. அதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் தமிழக அரசின் திட்டம்- விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.