1. தோட்டக்கலை

குறைந்த செலவில் கருவாட்டுப் பொறி-செடிகளில் பூச்சிகளை விரட்ட புதிய வழி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
New way to repel pests on low-cost embryo-

Credit : Suminter

செடிகளில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை விரட்ட பல்வேறு மருந்துகள் சந்தையில் விற்கப்படுகின்றன. இருப்பினும், இயற்கையான முறையில் பயிருக்கும், நிலத்திற்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், கருவாட்டுப் பொறி அமைத்து பூச்சிகளை விரட்டியடிக்கலாம்.

தேவைப்படும் பொருட்கள் (Ingredients)

 • காலியான தண்ணீர் பாட்டில் 

 • அல்லது பாலிதீன் பைகள்

 • பொடி கருவாடு (எந்த வகையும்)

 • டைகுரோவாஸ்' மருந்து

தயாரிப்பு முறை(Preparation)

 • 5 கிராம் பொடி கருவாட்டில் 'டைகுரோவாஸ்' மருந்தை ஓரிரு சொட்டு விட வேண்டும்.

 • பின் அவற்றை 20செ.மீ.,க்கு 15 செ.மீ., பாலிதீன் பை மற்றும் காலி தண்ணீர் பாட்டிலில் வைத்து நுாலால் கட்டிவிட வேண்டும்.

 • பாலிதீன் பை மற்றும் தண்ணீர் பாட்டிலில் 3 செ.மீ., அளவிற்கு 6 அல்லது 8 துளைகள் இட வேண்டும்.

 • இந்த பையை ஒரு குச்சியில் கட்டி பயிர்களுக்கு இடையே நட வேண்டும்.

 • கருவாட்டு வாடையில் பாலிதீன் பைக்குள் செல்லும் பூச்சிகள் இறந்துவிடும். இதனால் பயிர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. ஏக்கருக்கு 20 பைகள் கட்ட வேண்டும்.

 • 20 நாட்களுக்கு ஒருமுறை கருவாட்டை மாற்றினால் போதும். ஒவ்வொரு முறையும் ரூ.100 தான் செலவாகும்.

 • இதன் மூலம் பயிர்களில் முழுமையாக பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

தகவல்
உதவி வேளாண்மை அலுவலர்
இளையான்குடி வட்டாரம்
சிவகங்கை மாவட்டம்

மேலும் படிக்க...

மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!

1.5 கோடி விலை நிர்ணயிக்கப்பட்ட விநோதமான ஆடு! அசர வைக்கும் வசீகரம்!

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யக் காலக்கெடு- முழு விபரம்!

English Summary: New way to repel pests on low-cost embryo-

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.