1. தோட்டக்கலை

பயறு வகைப் பயிர்களில் விதை உற்பத்தித் திட்டம்- 100 பயனாளிகளுக்கு அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Seed Production Scheme for Pulses - Call for 100 Beneficiaries!
Credit : Lifeandtrendz

மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில், இந்த ஆண்டு பாசிப்பயறு மற்றும் உளுந்துப் பயிர்களில் விதை உற்பத்தித் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயறு பயிர்களின் விதை உற்பத்தி (Seed production of pulses)

மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயறு வகைப் பயிர்களில் விதை உற்பத்தியினை அதிகரிக்கத் தொகுப்பு செயல் விளக்கத் திடல் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மானியத்தில் இடுபொருட்கள் (Inputs on grant)

தொகுப்பு செயல் விளக்கத் திடல் திட்டத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதையுடன் உயிர்பூஞ்சாணக் கொல்லிகளான ட்ரைக்கோடொமா விரிடி, பேசில்லஸ் சப்டிலிஸ் வேப்பெண்ணெய்,TNAU பயறு அதிசயம் போன்ற இயற்கை வேளாண் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டமானது நடப்பாண்டு, சித்திரை மற்றும் ஆடிப்பட்டங்களில் பாசிப்பயறு மற்றும் உளுந்து பயிரில் செயல்படுத்தப்பட உள்ளது.

100 பயனாளிகள் (100 Beneficiaries)

எனவே பயிறு வகைப் பயிர்களை உற்பத்தி செய்ய ஆர்வம் உள்ள பாசன வசதியுள்ள விவசாயிகள் உடனடியாக வேளாண்மை நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம். அப்போது, தங்களது பட்டா மற்றும் ஆதார் ஆகியவற்றின் நகலைக் கொண்டு வரவேண்டும்.
இத்திட்டத்தில் 100 பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர்.

தனிப்பயிர் சாகுபடி (Individual crop cultivation)

பயறுவகைப் பயிர்களை மட்டுமே தனிப்பயிராகச் சாகுபடி செய்ய வேண்டும் என்பது இந்தத்திட்டத்தின் விதி. ஊடுபயிர் மற்றும் வரப்புப்பயிராகச் சாகுபடி செய்யக் கூடாது.

கொள்முதல் (Purchase)

மானியம் பெற்ற விவசாயிகளின் வயல்கள் விதைச் சாற்றுத் துறையில் பதிவு செய்யப்படும். விதைச்சாறு அலுவலர்கள் பூக்கும் பருவம், காய்ப்பிடிக்கும் பருவம் ஆகிய இரு பருவங்களில் வயலைப் பார்வையிட்டு மகசூலை மதிப்பீடு செய்வார்கள். இவ்வாறு உற்பத்தி செய்த விதைகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும்.

விலை(Price)

விதை கொள்முதல் விலையுடன் (ஆதாரவிலை ரூ.80/- சான்று விதை ரூ.75/) விதை உற்பத்தி மானியம் ரூ.25/- (கிலோவிற்கு) சேர்த்து வழங்கப்படும். எனவே, உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிரிட ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தினைத் தொடர்பு கொள்ளவும்.

இந்தத் திட்டத்தில் ஒரு கிராமத்திலிருந்து குறைந்தது 10 விவசாயிகள் கூட்டாகச் சேர்ந்து விதைப்பண்ணை அமைக்க முன் வரவேண்டும்.

கைபேசி எண்கள் (Mobile Numbers)

கூடுதல் விபரங்களுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், மதுரை, கைபேசி எண்: 94884 48760 &9751844922 தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

DAP உரம் விலை உயர்வு: 50% மேல் விலை அதிகரிப்பால் விவசாயிகள் கண்டனம்!!

உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!

கோடை நெல் உழவில் மேற்கொள்ள வேண்டிய பூச்சி மேலாண்மை முறைகள்! - வேளாண் துறை ஆலோசனை!!

English Summary: Seed Production Scheme for Pulses - Call for 100 Beneficiaries! Published on: 11 April 2021, 10:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.