1. தோட்டக்கலை

மண்ணின் மனம்கவர்ந்தக் காதலன் டீத்தூள் கப்பி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The immaculate lover of the soil, Tea Dust!

Credit : The Better India

தோட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது டீத்தூள் கப்பிதான். ஏனெனில் டீத்தூள் போடாத மண்ணைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மண்ணுக்கும் டீத்தூள் கப்பிக்குமான உறவு உள்ளது.

டீத்தூள் கப்பி

நம் வீட்டில் யாராவது ஒருத்தர் கட்டாயம் டீ குடிப்பவரா இருக்கலாம் அல்லது ஒரு வேளையாவது டீ குடிக்கலாம். டீ தயாரித்து விட்டு பெரும்பாலும் அந்த டீத்தூளை நாம் வெளியே தூக்கி விட்டெறிந்து விடுவோம். ஆனால் அதைத் தூக்கி எரியாமல் உங்கள் மாடித்தோட்டத்தில் பயன் படுத்தினால் என்ன நன்மைகள் நம்மை வந்துசேர்கின்றன தெரியுமா?

மக்குவது எப்படி?

மண்ணின் மீது தூவப்படும் டீத்தூள் கப்பி மக்கிவிடுகிறது. ஆனால், மண்ணில் போடப்படும் டீ பேக் மக்க எவ்வளவு நாளாகுமா? என்றக் கேள்வி நம்மில் பலருக்கு எழுகிறது. டீ பேக்கும் மக்கும். ஆனால் கூடுதல் நாட்கள் தேவைப்படும்.

Manila hemp

அதாவது டீ பேக் மக்குவதற்கு குறைந்த 3 முதல் 4 மாதங்கள் ஆகும். பெரும்பாலும் இந்த பேக் Manila hemp எனப்படும் வாழை நாரிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இருந்தாலும் உங்கள் செடிக்கு போடுவதற்க்கு முன்பு டீ பேக் எதில் தயாரிக்கபட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்வது முக்கியம்.

டீ இலைகளில் tannic acid மற்றும் இயற்கை சத்துக்கள் உள்ளன டீ தூளை தொட்டியில் போடும்பொழுது அது மக்கி செடிகளுக்கு தேவையான சத்துக்களைக் கொடுத்து ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

எண்ணற்ற நன்மைகள்

  • வீட்டில் பயன்படுத்தும் காய்கறிக் கழிவுகளையோ மற்றும் டீ தூள் உரமாக பயன்படுத்தும் பொது தேவையற்ற குப்பைகள் சேர்வது குறைகிறது.

  • காய்கறி கழிவுகளோடு டீ தூளைச் சேர்ந்துப் பயன்படுத்தும்போது அவை வேகமாக மக்குகின்றன.

  • நீங்கள் மண் புழு உரம் தயாரிப்பவராக இருந்தால் அல்லது மாடித்தோட்ட தொட்டிகளில் மண்புழுக்கள் இருந்தால், அதில் இந்த டீ தூளை போடும்போது நிறைய சத்துள்ள இயற்கை உரம் பயிர்களுக்கு கிடைக்கிறது.

  • Coir Pith போன்று இதுவும் நீரை பிடித்து வைத்துக்கொள்வதால் வேர்களுக்கு தேவையான நீர் கிடைப்பதுடன், நீர் சேமிப்பும் நடைபெறுகிறது.

  • டீ தூளில் இருந்து வரும் வாசம் செடிகளைப் பூச்சிகள் தாக்காதவாறு செய்து, சிறந்தப் பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது.

  • செடியைச் சுற்றிக் குழிதோண்டிப் புதைப்பது, அங்கு களைகள் வராமல் முற்றிலும் தடுக்கிறது.

டீ பேக் (Tea bag)

நாம் தூக்கிப்போடும் டீ பேக்கினால் நம் வீட்டு தோட்டத்திற்கு இவ்வளவு நன்மைகள் உள்ளன . இனிமேல் அதை தூக்கிப்போடாமல் இயற்கை காய்கறிகள் உற்பத்தி செய்யப் பயன்படுத்தி உர செலவை குறைப்போம்.

மேலும் படிக்க...

பயிர்க் காப்பீடு செய்யக் காலக்கெடு நீட்டிப்பு- முதல்வர் உத்தரவு!

புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

English Summary: The immaculate lover of the soil, Tea Dust!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.