1. தோட்டக்கலை

மண் வளத்தைப் பாதுகாக்க-பல தானிய சாகுபடி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
To Conserve Soil Fertility-Multiple Grain Cultivation!

கோடை காலத்தில் இறுதியில் பல தானியப் பயிர் சாகுபடி செய்துப் பலனடையுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பல தானியப் பயிர் சாகுபடி என்பது பலவிதங்களில் விவசாயிகளுக்கு பலன் அளிக்கக்கூடியது.

பல தானிய பயிர் சாகுபடி என்பது ஒரே வயலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல விதமான பயிர்களின் விதைகளை விதைத்து அவை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளத்தை பெருக்குவதாகும்.

வகைகள்

பொதுவாக தானியவகை பயிர்களில் 2 வகை, எண்ணெய் வித்து பயிர்களில் 2 வகை, பயறு வகை பயிர்களில் 2 வகை, பசுந்தாள் உரப் பயிர்களில் 1 (அ) 2 வகை என தலா 1 கிலோ வீதம் ஒரு ஏக்கருக்கு 7 கிலோ விதை போதுமானதாகும்.

கோடைக்காலத்தின் இறுதியில் பருவப்பயிருக்கு முந்தைய காலத்தில் கிடைக்கப்பெறும் இடைப்பட்ட காலத்தில் பசுந்தாள் உரப் பயிர்களோ, பல தானிய பயிர்களோ பயிரிட்டு அவற்றை மடக்கி உழுது அடுத்த பயிருக்கு உரமாக்குவது அங்கக வேளாண்மையின் மிகச்சிறந்ததொரு தொழில்நுட்பமாகும்.

பல பயிர் சாகுபடி ஏன்?

காலங்காலமாக செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி களைக்கொல்லி பயன்பாட்டின் காரணமாக வளம் குன்றியுள்ள மண்ணின் வளத்தை மீட்டெடுக்கவும், இயற்கை விவசாயத்திற்கு அடித்தளமாகவும் விவசாயிகள் முதலில் மேற்கொள்ள வேண்டியது பல தானியப்பயிர் விதைப்பாகும்.
இம்முறையில் தானியவகை பயிர்களான சோளம், கம்பு, திணை, சாமை ஆகியவற்றையும், பயறு வகைப்பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, கொள்ளு, கொண்டைக் கடலை ஆகியவற்றையும், எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு, எள் ஆகியவற்றையும் பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப் பூண்டு. சணப்பை ஆகியவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒரே நிலத்தில் விதைக்க வேண்டும்.
இந்த விதைகளை குறிப்பிட்ட அளவு பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமில்லை.

நிலத்தின் பரப்பு

கிடைக்கும் விதைகளைப் பொறுத்து விதைக்கலாம். விதைகள் வளர்ந்து 45-50 நாட்களில் பூக்கம் பருவத்தில் செடிகளை மடக்கி நன்கு உழவு செய்ய வேண்டும்.

இதன் மூலம் மண்ணில் நுண்ணுணுயிர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கிறது.பல ஆண்டுகளாக பயன்படுத்திய செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறைந்து, மண்ணின் கரிமச்சத்து அளவு அதிகரிக்கிறது.


பல தானிய பயிர்களை மடக்கி உழுதப் பிறகு இயற்கை உரங்களான சாணம், கோமியம், பஞ்சகாவ்யம், ஜீவாமிர்தம் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை துவங்கலாம்.

தகவல்
சு.சித்திரைச்செல்வி
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர்,நாமக்கல் மாவட்டம்

மேலும் படிக்க...

ஐஸ் பால் Vs சூடான பால் - எது சிறந்தது?

தனக்குத் தானேக் கல்லறை- ஆதரவற்ற பாட்டியின் ஆசை!

English Summary: To Conserve Soil Fertility-Multiple Grain Cultivation! Published on: 20 June 2022, 09:01 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.