1. தோட்டக்கலை

நெல் சாகுபடியில் உச்ச மகசூல் பெற உதவும் சில நடவு முறைகள்

KJ Staff
KJ Staff
paddy land preparation
Credit : Organic Farming

நடவு வயல் தயார் செய்தல்   

நன்கு மட்கிய பண்ணை எரு அல்லது தொழு உரத்தை எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் சீராக பரப்பி உழவு செய்ய வேண்டும். வேண்டிய அளவு பசுந்தாள் உரப்பயிரை (Green manure) சேற்று உழவின்போது 10 நாட்கள் முன்னதாக மடக்கி உழுவது சிறந்தது.

இளம் வயதுடைய ஒற்றை நாற்றுக்களை நடவு செய்வதால் நிலத்தை நன்கு சமன் செய்வது மிக முக்கியமாகும்.சரியான நீர், களை மற்றும் உர  மேலாண்மைக்கு (Fertilizer Management) இது அவசியமாகிறது. பருவத்திற்கேற்ற பரிந்துரைக்கப்பட்ட மணிச் சத்து முழுவதையும் , சாம்பல் சத்தில் பாதியையும் கடைசி உழவின் போது அடியுரமாக இட்டு வயலைச் சமன் செய்யவேண்டும். பரிந்துரை படி எக்டருக்கு 25 கிலோ ஜிங்க் சல்பேட் (Zinc sulphate) உரத்தை அடியுரமாக இடவேண்டும்.

நடவு முறைகள்

நெல் சாகுபடியில் நடவின் போது தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும். நடவின் போது கடைப்பிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் அனைத்தும் செலவில்லாதவை ஆனாலும் மிகமிக முக்கியமானவை இவைகளை முறையாக கடைபிடித்தால் தான் அதிக மகசூல் (HIgh Yield) பெற முடியும்

rice transplanting
Credit : Organic Farming

இளம் வாளிப்பான நாற்றுகளையே நடவு செய்ய வேண்டும். குறுகிய வயதுடைய ரகங்களையும் மத்திய வயதுடைய ரகங்களையும் 25 நாட்களில்  நடவு செய்ய வேண்டும். நீண்ட வயதுடைய ரகங்களை 30 , 35 நாட்களில் நடலாம். நாற்றில் 4-5 இலைகள்  இருக்க வேண்டும். இளம் நாற்றுகளை நடும்பொழுது அவை நடவு செய்த 10 நாட்களில் தூர்விடத் தொடங்கும். பயிர் முழு  வளர்ச்சி பெறும்.

இப்படி 25  நாட்களில் நடவு செய்ய முடியாவிட்டால், அதற்கு  அடுத்த கட்டமாக அவை தூர் விடத்துவங்கியவுடன் நடவு செய்ய வேண்டும். அதாவது குறைந்த வயதுடைய ரகங்களை 35  நாட்களிலும் நடுத்தர ரகங்களை 40 நாட்களிலும் நடவு செய்யலாம்.

குறைத்த வயதுடைய நெல்லாக இருந்தால் பறித்த நாற்றுக்களை அன்றோ மறுநாளோ நடவு செய்துவிட வேண்டும். நாற்றுகளை அதிகபட்சமாக 3 நாட்களுக்கு வைத்திருந்து நடவு செய்யலாம்.

வயதான நாற்றுகளை நடவு செய்தால் மருந்து அடிக்கும் செலவு குறைவு என்று உழவர்கள் நம்புகிறார்கள். இது தவர்ண கருத்தாகும். வயதான நாற்றுகளை நடவு செய்து பழகிவிட்ட அனேக உழவர்கள் இனம் நாற்றுகளை நடவு செய்வதனால் கிடைக்கும் பலன்களை உணர்வதில்லை. தூர்கட்ட வேண்டிய  பருவத்தில் நடவு வயலில் இருக்க வேண்டிய பயிர் நாற்றாங்காலிலேயே இருந்து விட்டால் அவை, மெலிந்து உயரமாக வளர்ந்து கணுவிடத் துவங்கிவிடும். பின்பு, என்ன உரம் வைத்தாலும் பலன் கிட்டுவதில்லை.

சில உழவர்கள் நாற்றுக்கு உரிய வயது வந்தவுடன் தான் நடவு நிலத்தை தயாரிக்கத் துவங்குவர். இது தவறான முறை. திட்டமிட்டு செயல்பட்டால் நாற்றுகளை பறித்த அன்றோ அல்லது மறுநாளோ நடவு செய்யலாம்.

பட்டம் விட்டு நடுதல்

நாற்றுகளை இரண்டரை மீட்டர் (8 அடி) இடைவெளிக்கு ஒரு முறை 30 செ.மீ. (ஒரு அடி) இடைவெளி விட்டுநடவு செய்வது சிறந்த முறை.

நடவு துவங்குவதற்கு முன்பு இரண்டரை மீட்டர் இடைவெளிக்கு ஒரு முறை 30 செ.மீ  இடைவெளி விட்டு இரு வரிசையில் நடவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு படத்திலும் 2 பெண்கள் வீதம் நடவு செய்ய விட வேண்டும். இதனால், ஒவ்வொருவரும் எப்படி நாடுகிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும். ஒவ்வொருவர் நடுவதையும் சைக்கிள் டயர் மூலம் எண்ணி எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறதா என்பதையும் மேற்பார்வை செய்து கொள்ளலாம்.

நாற்றுகளில் எண்ணிக்கை

குறைந்த வயதுடைய நெல் ரகங்களுக்கு ஒரு குத்தில் 3  நாற்றுகளும்  மத்திய மற்றும் நீண்ட வயதுடைய நெல் ரகங்களுக்கு 2 நாற்றுகளும் நடவு செய்தல் போதும். வீரிய நாற்றுகளாக இருந்தால் 2  அல்லது 3  நாட்களுக்கு மேல் நடவு செய்ய மாட்டார்கள். ஆனால், மெலிந்த நாற்றுகளாக இருந்தால் குத்துக்கு 8 முதல் 10 நாற்றுகளைத்தான் நடவு செய்வார்கள்.

நடவு ஆழம்

இளம் நாற்றுக்களை நாடும் போது 3 செ.மீ ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். உலக நடவு செய்யும் பொழுது அவை விரைவில் தூர்க்கட்ட துவங்கும். நமது நோக்கம் ஒவ்வொரு குத்திலும் 5  பயனுள்ள தூர்களையாவது உருவாக்க வேண்டும் என்பது தான்.

நாற்றுளை ஆழமாக நடவு  செய்தல் தூர்கள் கிளைப்பதும் அவை வெளி வருவதும் கால தாமதம் ஆகும். தாமதமாக வரும் தூர்கள் பயனற்ற தூக்கலாக இருக்கும். அல்லது பயிர்களின் அளவின் எண்ணிக்கையும் குறையும்.

Credit : Organic Farming

வரிசை நடவு

வரிசையில் நடவு செய்யும் பொழுது வரிசைகள் கிழக்கு மேற்கு திசையில் இருக்குமாறு நடவு செய்தல் வேண்டும். இதனால் சூரிய ஒளியை பயிர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பயிர் எண்ணிக்கை

நாற்றுகளை நடவு செய்யும்போது பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும். ரகங்களின்

வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு சதுர மீட்டர் பரப்பிலும் கீழ்க் கண்ட எண்ணிக்கை இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். 

ஒரு சதுர மீட்டர் என்பது 100 செ.மீ. தினமும் 100 செ.மீ அகலமும் கொண்ட பரப்பாகும் மொன்று சைக்கிள் டயர் பரப்பு ஒரு சதுர மீட்ட என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, ஒரு சைக்கிள் டயர் பரப்பில்  குறைந்த வயதுடைய நெல் ரகங்களுக்கு 27  குத்துகளும், மத்திய வயது நெல் இரகங்களுக்கு 17 குத்துகளும் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். அதிக வயதுடைய ரகங்களுக்கு 11 குத்துகள் இருக்க வேண்டும்.

நடவின் போது பெண்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களை ஊக்குவித்து எப்பாடு பட்டாவது பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும். ஒரு சைக்கிள் டயர் பரப்பில் ஒரு குத்து குறைந்தால் எக்டருக்கு கிட்டத்தட்ட 100 கிலோ மகசூல் குறையக்கூடும். இது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இதனை தவிர்த்தே ஆகவேண்டும். 

செய்யக் கூடாதது

சில பகுதிகளில் நாற்றுக்களை சாய்த்து நடவு செய்யும் பழக்கம் உள்ளது. இது தவிர்க்கப்  பட  வேண்டும். நாற்றுகளை செங்குத்தாகவே நடவு செய்ய வேண்டும்.

வயதான நாற்றுகள்

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் நாற்றுகளை நடவு செய்ய நேர்ந்தால், குத்துக்கு நாற்றின் வயதுக்கு ஏற்ப 2  அல்லது 3 நாற்றுகளை சேர்த்து நடலாம். சற்று ஆழமாகவும் நடலாம். நாற்று அதிகம் வளர்ந்து இருந்தால் நுனிப்பகுதியை கிள்ளி அகற்றி விட வேண்டும். அவற்றில் குருத்துப்பூச்சிகளின் முட்டை குவியல்கள் இருக்கலாம் எனவே, அவற்றை எரித்து அழித்து விட வேண்டும். வயதான நாற்றுகளுக்கு பயிர் எண்ணிக்கை குறையவே கூடாது

பழுது நாற்று நடுதல்

நடவு செய்த 10 நாட்களில் பழுது நாற்று நடவு செய்ய வேண்டும். இதற்கு நடவின் போதே சில இடங்களில் மிகவும் நெருக்கமாகவும் அதிக நாற்றுகளை வைத்தும் நடவு செய்துவிட வேண்டும். இப்பகுதியில்  இருந்து அதிகப்படியான நாற்றுகளை கலைத்து பயிர் இழந்து பட்ட இடங்களில் நடவு செய்து கொள்ளலாம்.

குறிப்பு: சதுர மீட்டருக்கு 80 குத்துக்குள் நடவு செய்வதால் பயிர்கள் தூர்விட்ட பிறகு மிக நெருக்கமாக காணப்படும். இதன் காரணமாக  புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  

ஆகையால், தழைச்சத்தை பலமுறை பிரித்து இட பரிந்துரை செய்யப்படுகிறது. நீர் நிர்வாக முறைகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.

தினமும் விழிப்புடன் புகையான் தோன்றுகிறதா என கண்காணித்து வரவேண்டும். புகையானுக்கு பயந்து பயிர் எணிக்கையை  குறைக்காமல் அவ்வப்போது பயிரின் தூர்பகுதியை கண்காணித்து வந்தாலே போதுமானது.

 

K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN 

Read More...

கோடையில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்க பசுந்தீவனமாக மர இலைகள்

உரச்செலவை குறைத்து விளைச்சலை அதிகரிக்க உதவும் பசுந்தாள் உரத்தின் பயன்கள்!

English Summary: to get high yield in paddy cultivation! here are some rice transplanting methods and land preparation Published on: 25 June 2019, 03:38 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.