1. செய்திகள்

100 நாள் வேலை திட்டம்- தினக்கூலி உயர்வு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
100 day work plan - daily wage increase!

மத்திய அரசின் மகத்தானத் திட்டமான 100நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் தினக்கூலியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலைஉயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 10 மாநிலங்களுக்கு மட்டுமே 5சதவீதத்திற்கும் அதிகமான உயர்வு கிடைத்துள்ளது. இவை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

2022-23 நிதியாண்டிற்கான கிராமப்புற வேலை உறுதித் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் புதிய ஊதிய விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவும், 10 மாநிலங்கள் 5 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வும் பெறுகின்றன. மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளவில்லை. இந்த புதிய ஊதியம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதிகபட்சமாக கோவாவுக்கு 7.14 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 2021-22இல் தினக்கூலியாக ரூ294 இருந்த நிலையில், 2022-23க்கு 315ஆக உயர்ந்துள்ளது. குறைவான ஊதிய உயர்வாக 1.77% மேகாலயாவுக்கு கிடைத்துள்ளது. அங்கு தினக்கூலி 226இல் இருந்து 230ஆக உயர்ந்துள்ளது.
அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஊதியம் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2022-23 ஆம் ஆண்டிற்கான NREGS ஊதியங்கள் ஒரு நாளைக்கு ரூ 4 முதல் ரூ 21 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

MGNREGA ஊதிய விகிதங்கள் CPI-AL (நுகர்வோர் விலைக் குறியீடு-விவசாயத் தொழிலாளர்) மாற்றங்களின்படி நிர்ணயிக்கப்படுகின்றன, இது கிராமப்புறங்களில் பணவீக்கத்தின் அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.

மேலும் படிக்க...

இல்லத்தரசிகளுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசம்- மாநில அரசு முடிவு!

அழகை என்றும் தக்கவைக்க- இவற்றுக்கு 'உ ஊ' சொல்லுங்க!

English Summary: 100 day work plan - daily wage increase! Published on: 30 March 2022, 12:22 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.