1. செய்திகள்

தேர்வு முடிவுகளை வைத்தது விளம்பரம் செய்ய பள்ளிகளுக்கு தடை: பள்ளிக்கல்வித் துறை இயக்கம் அறிவிப்பு

KJ Staff
KJ Staff

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தமிழகம் முழுவதும் சுமார் 8.64  லட்சதற்கு அதிகமான மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். தேர்ச்சி விகிதமானது 91 .3 ஆக இருந்ததுஇம்முறை வட மாவட்டங்களில் தேர்ச்சி விகிதமானது சற்று குறைவாக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது.  

பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மதிப்பெண் பட்டியலும் வெளியாகிவிடும். ஆனால் இம்முறை தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டது. மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் பள்ளியில் நேரிடையாக பெற்று கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், V . C . ராமேஸ்வர் முருகன் கூறுகையில், பள்ளிகள் தங்களது பள்ளி மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை வெளியிடவோ அல்லது அதனை வைத்து விளம்பரம் செய்யவோ கூடாது. பாடப்பிரிவுகளில் முழுமதிப்பெண் பெற்றவர்களின் விவரங்களை வெளியிட தடை விதித்துள்ளது. மேலும் அவர் கூறுகையில் இது போன்று வெளியிடுவதால் பள்ளிகளுக்கிடையில் ஆரோக்கியமற்ற போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். தோல்வி மற்றும் மதிப்பெண் குறைத்த மாணவர்கள் 104 என்று பிரத்யோக இலவச அழைப்பு எண்னை  தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

இம்முறை மாணவர்களின் மதிப்பெண் சற்று குறைவாகவே உள்ளது. புதிய பாடத்திட்டம், புதிய வினாத்தாள் அமைப்பு, என மாணவர்கள் இம்முறை நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. மேலும் பாட திட்டமானது அகில இந்தியா தேர்வு, அரசு தேர்வு போன்றவற்றை எதிர்கொள்ளும் வகையில் அமைக்க பட்டுள்ளது. இதனால் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் கூட இம்முறை சற்று குறைவாகவே பெற்றுள்ளனர்.புதிய மாற்றங்கள் சற்று கடினமாகவே இருக்கும். இருப்பினும் நுழைத்தேர்வு மற்றும் அகில இந்தியா தேர்வுக்கு இவ்வகையான மாற்றம்  உறுதுணையாக இருக்கும்.

English Summary: 12th Mark Sheets will be given in the school: Education department advice dont disclosure the Mark details. Published on: 20 April 2019, 04:20 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.