1. செய்திகள்

ஒரு தேங்காய் விலை ரூ.30,000- விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
A coconut costs Rs.30,000- details inside!

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காய் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  குறிப்பாகத் தென்னையின் இலை, காய், நார் என அனைத்தும் பலவகைகளில் மக்களுக்குப் பயன்படுகிறது.

எந்த சுப வைபவமானாலும், தேங்காய் இடம்பெறாமல் இருக்காது. சாதாரணமான சடங்காக இருந்தாலும் சரி, அதனை தேங்காய், பூ, பழம் வைத்துத் தொடங்குவது மரபு. மங்கலத்தின் அடையாளமாகக் கருதப்படும் பொருட்களில், தேங்காய் முக்கியமானது.  திருமணத்திற்கு வரும் விருந்தினருக்கு,  வழங்கப்படும், தாம்பூலத்தில்கூட தேங்காயே முக்கியப் பங்கு வகிக்கும்.

பிரதான உணவு

அது ஒருபுறம் என்றால், தென்னிந்திய சமையலிலும், தேங்காயிற்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா  உள்ளிட்ட மாநிலங்களில் தேங்காயைக் கொண்டு தயாரிக்கப்படும்  உணவு வகைகள் ஏராளம். உண்மையில் தென்னையில் இருந்து கிடைக்கும் இளநீர்தான் ஏழைகளின் உன்னத மற்றும் மலிவான சத்து பானம். குறிப்பாக கோடைகாலங்களில் காலைவேளையில்  இளநீர் பருகுவது, உடல் சூட்டைத் தணிக்கப் பெரிதும் உதவும்.

ஆன்மிகம்

இது மறுபுறம் என்றால், ஆன்மிகத்திலும், தேங்காயிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஏனெனில், பெரும்பாலான கோவில்களில் நடைபெறும் பூஜைகளின்போது சாமிக்குப் படைக்கப்படும் முக்கிய நெய்வேத்தியப் பொருள் எதுவென்றால் அது தேங்காய்தான். மேலும், எந்த ஹோமமாக இருந்தாலும் அங்கு  கலசத்தை அலங்கரிப்பது தேங்காய்தான்.  

ரூ.30,000

அந்த வகையில், கோயில் திருவிழாக்களிலும் சாமிக்குப் படைக்கப்படும் தேங்காயைப் பெற மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர். ஏன், அதற்காக எந்த விலையையும் கொடுத்தத் தயாராக இருப்பர். இதற்கு தமிழகத்தின் தேனி மாவட்டம் போடியில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலசுப்ரமணியர் கோயிலில் நடைபெற்ற நிகழ்வே சாட்சி.

இங்கு பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கும், வள்ளிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனைத்தொடர்ந்து திருமண வேள்விக் கலசத்தில் வைக்கப்பட்டிருந்த  தேங்காய் ஏலத்தில் விடப்பட்டது. ரூ.3 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம் படிப்படியாக  பக்தர்களால் உயர்த்தப்பட்டது. இறுதியில் அந்த தேங்காயை ரூ.30 ஆயிரத்திற்கு ஒரு பக்தர் ஏலத்தில் எடுத்தார்.  ஆக இங்கு ஒரு தேங்காய் ரூ.30 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

சிறப்பு

ஏனெனில், கலசத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்ட்ட தேங்காய் பல ஆண்டுகள் ஆனாலும் கெடாது என்பது பக்தர்கிளன் நம்பிக்கை.  மேலும் இந்தத் தேங்காயை வீட்டுப் பூஜை அறையில் வைத்து பூஜித்தால்,  திருமணத்தடை, தொழில் விருத்தி, சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இந்த தேங்காயை ஏலம் எடுப்பதில் கடுமையான போட்டி நிலவுவது வழக்கம்.

மேலும் படிக்க...

பெண்களுக்கு ரூ. 6000 வழங்கும் மத்திய அரசு!

சுட்டெரிக்கும் சூரியன்-கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்கும் வழிகள்!

English Summary: A coconut costs Rs.30,000- details inside! Published on: 06 April 2023, 09:11 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.